Cinema News
தூக்கிவிட்டவங்களை கழட்டிவிட்டு கங்குவா பண்ணிய சூர்யா!.. இப்படியே போனா அவ்வளவுதான்!..
Actor suriya: நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. இவரை இயக்குனர் வசந்த் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், கார்த்தி போல முதல் படத்திலேயே சூர்யா ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. இயக்குனர் பலாவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘நந்தா’ படம்தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு போனது.
மௌனம் பேசியதே:
அதேபோல், அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம்தான் சூர்யாவை கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்த்தது. அடுத்து காக்க காக்க படம் மூலம் சூர்யாவை ஒரு ஸ்டைலீசான ஆக்சன் ஹீரோவாக மாற்றியது கவுதம் மேனன்தான். அதேபோல், வாரணம் ஆயிரம் படம் மூலம் சூர்யாவை ஒரு லவ்வர் பாயாகவும் கவுதம் காட்டினார்.
இயக்குனர் ஹரி:
அடுத்து ஆறு, அருவா, சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்கள் மூலம் சூர்யாவை கிராமத்து ரசிகர்களிடமும் கொண்டு சென்றது இயக்குனர் ஹரிதான். சிங்கம் 2-வுக்கு பின் பல வருடங்கள் பெரிய வெற்றியை சூர்யா கொடுக்கவில்லை. அப்போதுதான் இயக்குனர் சுதா கொங்கரா அவருக்கு கை கொடுத்தார். அப்படி உருவான ‘சூரரைப்போற்று’ படம் சூர்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படி தனது கேரியரில் முக்கிய இயக்குனர்களாக இருந்த பாலா, அமீர், கவுதம் மேனன், ஹரி, சுதா கொங்கரா என எல்லோரையும் கழட்டிவிட்டவர்தான் சூர்யா. ஹரி இயக்கிய சிங்கம் 3 சரியாக போகவில்லை. எனவே, அவர் உருவாக்கிய யானை படத்தில் நடிக்க மறுத்தார் சூர்யா. அதேபோல், கவுதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்க மறுத்தார்.
பாலாவின் இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின் யானை, வணங்கான் படங்களில் அருண் விஜயும், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமும் நடித்தார்கள்.
சுதா கொங்கரா:
ஒரு படம் ஓடவில்லையெனில் அவரை தூக்கிவிட்ட ஹரி, கவுதம் மேனன், சுதா கொங்கரா போன்றவர்களை சூர்யா கழட்டிவிட்டது தவறு என்பதே சினிமா விமர்சகர்களின் பார்வையாக இருக்கிறது. சூரரைப் போற்று படத்திற்கு பின் புறநானூறு என்கிற கதையை உருவாக்கினார் சுதா கொங்கரா. அதில் நடிக்க சூர்யாவும் சம்மதித்தார்.
ஆனால், கதையில் சில மாற்றங்களை அவர் சொல்ல சுதா கொங்கரா ஏற்கவில்லை. எனவே, அப்படம் டிராப் ஆகிவிட்டது. இப்போது அதில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
கங்குவா:
இவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிறுத்தை சிவாவிடம் கங்குவா கதையை கேட்டு ‘பாகுபலி போல ஒரு படத்தில் நாம் நடிக்கப்போகிறோம். இனிமேல் நாம்தான் அடுத்த பிரபாஸ்’ என கணக்குப்போட்டு கங்குவாவில் கத்தினார் சூர்யா. ஆனால், படமோ ஊத்திகொண்டது.
இனிமேலாவது தனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பாலா, அமீர், கவுதம் மேனன், ஹரி, சுதா கொங்கரா போன்றவர்களோடு கை கோர்த்து வெற்றிப்படங்களை கொடுத்து தனது கேரியரை தக்கவைக்க சூர்யா முயற்சி செய்ய வேண்டும் என்பதே சினிமா பத்திரிக்கையாளர்களின் பார்வையாக இருக்கிறது.
இதையும் படிங்க: நடிகருடனான காதலை ஒத்துக்கொண்ட ராஷ்மிகா… இவ்வளவு நாள் மறச்சிட்டியே செல்லம்!..