பஞ்சாயத்தெல்லாம் ஓரங்கட்டியாச்சி!. பல வருடம் கழித்து சூர்யாவுடன் இணையும் அந்த இயக்குனர்…

Published on: November 22, 2023
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவில் சூர்யா நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா வரிசையாக அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா திரைப்படத்திலும் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படமும் அதனை அடுத்து தெலுங்கு படம் அடுத்ததாக ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் வருவதாக தெரிகிறது. எப்படி பார்த்தாலும் இன்னும் 4 வருடங்களுக்கு மிகவும் பிஸியான நடிகராக இருக்கிறார் சூர்யா.

இதையும் படிங்க: வச்சாங்கய்யா கன்னிவெடிய! சிம்புவும் தனுஷும் ஒரே படத்திலா? இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே

குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி உள்ள சூர்யா பாலிவுட்டில் ஒரு சில படங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்குவதாகவும் தெரிகிறது. இப்படி படுபிஸியாக இருக்கும் சூர்யாவுடன் மீண்டும் கௌதம் மேனன் இணைய வாய்ப்பிருப்பதாக சில செய்திகள் வெளியாகின.

கௌதம் மேனன் விக்ரம் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான ப்ரோமோஷனில்தான் கௌதம் மேனன் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அடுத்த குட்டிக்கதைக்கு ரெடியான ரஜினி!.. லால் சலாம் ஆடியோ விழா அப்டேட் இதோ!..

அப்போது ஒரு பேட்டியில் இனிமேல் நான் நடிக்கப் போவது இல்லை என்றும் டைரக்‌ஷனில் கவனம் செலுத்தப் போவதாகவும் கௌதம் மேனன் கூறியிருக்கிறார். துருவ நட்சத்திரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படம் சூர்யாவை வைத்துதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சூர்யாவுடன் காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கௌதம் மேனன் மறுபடியும் ஒரு ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுக்க தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் சூர்யா இருக்கும் பிஸியில் எப்படியும் 2026 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் இது சாத்தியமாகும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: அன்லிமிட்டேட் அழகு அள்ளுது!. பிரியங்கா மோகனின் அழகில் குவியுது லைக்ஸ்!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.