அட குடும்பமா எப்படி விளையாடுறாங்க? நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்ட சூர்யா
Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு போற்றத்தக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூர்யா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவரும் பல விமர்சனங்களை கடந்து வந்தவர்தான்.
ஏனெனில் அந்தளவுக்கு நடிப்பை பற்றி தெரியாதவர். நடனம் சுத்தமாக ஆடவும் தெரியாது. டையலாக் ஒழுங்காக பேச வராது என சிவக்குமாரே ஒரு பேட்டியில் கூறினார். அப்படி இருந்த சூர்யாதான் இன்று நேஷனல் விருதை தன் வசப்படுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்ணா!.. ஃபீல் பண்ணி விஜய் வெளியிட்ட புதிய அறிக்கை..
விதவிதமான கெட்டப்களை போட்டுக் கொண்டு வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டு மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் கோலிவுட்டில் சும்மா கெத்தா வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. வரலாற்று பின்னணியை மையமாக வைத்து தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: முதன் முதலில் அதிக வசூலை கொடுத்த முதல் தமிழ் படம் எது தெரியுமா? அந்த காலத்திலேயே இவ்ளோ வசூலா?
ஒரு பக்கம் குடும்பம், குழந்தைகள் என ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவனாகவும் அவரது கடமையை செய்து வருகிறார் சூர்யா. அவ்வப்போது குழந்தைகளின் நலன் கருதி விடுமுறை பயணமாக வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டு வருகிறார்.
மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூர்யா தற்போது தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாயுடன் குடும்பமே சேர்ந்து விளையாடும் அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த லிங்க்: https://www.instagram.com/reel/C2628YaxL2p/?utm_source=ig_web_copy_link