அதிக வசூலை கொடுத்த முதல் தமிழ் படம்!.. அந்த காலத்திலேயே இவ்ளோ வசூலா?

by Rohini |   ( Updated:2024-02-04 09:23:54  )
mangamma
X

mangamma

Mangamma Sapatham: இப்போதுள்ள காலகட்டத்தில் அதிக வசூலை தரும் படங்களாக ஜெயிலர், லியோ என ரஜினி, விஜய், அஜித் இவர்களின் படங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டை ஆக்கிரமித்து வருகின்றன. படம் வெளியாவதற்கு முன்னாலேயே ரஜினி ,விஜயின் படங்கள் பிஸினஸ் அளவில் பல கோடிகளை சுருட்டி விடுகின்றது.

ஆனால் சினிமா உலகில் முதன் முதலில் அதிக வசூலை பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்ற படமாக ‘மங்கம்மா சபதம்’ படத்தை சித்ரா லட்சுமணன் கூறினார். அந்த படத்தில் நடிகர் ரஞ்சன் மற்றும் நடிகை வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தரா தேவி இவர்கள்தான் லீடு ரோலில் நடித்தார்களாம்.

இதையும் படிங்க: ரஜினியைப் பார்த்ததும் அறைக்குள் மது பாட்டிலுடன் பம்மிய செந்தில்… அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!

இந்தப் படத்தை இயக்கியவர் ஆச்சாரியார். இவர்தான் முதன் முதலில் ரஞ்சனை அறிமுகப்படுத்தியவர். சந்திரலேகா என்ற பிரம்மாண்ட படைப்பை கொடுத்த எஸ்.எஸ். வாசன்தான் இந்த மங்கம்மா சபதம் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

ரஞ்சனை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தும் போது அவரது தந்தை முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார். என் மகன் படித்து பெரிய டாக்டராக வேண்டும் என்று சொல்ல ஆச்சாரியார் மற்றும் அவரது உதவி இயக்குனரான வேப்பத்தூர் கிட்டு இவர்கள்தான் ரஞ்சனின் அப்பாவை சம்மதிக்க வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: செக்க கொடுத்து நான் பட்ட பாடு! சிவகார்த்திகேயனிடம் மாட்டிக்கிட்டு முழிச்ச பிரபல இயக்குனர்

சந்திரலேகா படத்தில் சசாங்கன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரும் ரஞ்சன்தான். அந்தப் படத்திலேயே ரஞ்சனின் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்தது. அதன் மூலம்தான் மங்கம்மா சபதம் படத்தில் நடிக்க ரஞ்சனுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.

மங்கம்மா சபதம் படத்தில் ரஞ்சனுக்கும் வசுந்தரா தேவிக்கும் இடையே இருக்கும் காதல் காட்சிகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து எடுத்தாராம் ஆச்சார்யா. மிகவும் நெருக்கமாக அந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அதனால் அந்த நேரத்தில் இது சம்பந்தமாக இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததாம் மங்கம்மா சபதம். அந்த காலத்திலேயே இந்தப் படம் பெற்ற வசூல் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 40 லட்ச ம் என்று சித்ரா லட்சுமணன் கூறினார். இதுதான் அதிக வசூலை பெற்ற முதல் தமிழ்ப்படமாம்.

இதையும் படிங்க: முதல்ல வீட்ட பாரு… அப்புறம் நாட்டை பார்ப்போம்!.. விஜயை விளாசிய பயில்வான் ரங்கநாதன்…

Next Story