25 வருடமாக கேப்டன் நினைவாக சூர்யா செய்யும் செயல்! இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயம்

by Rohini |
kanth
X

kanth

Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தன் விடுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய சூர்யா முதல் வேலையாக கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து தன் அஞ்சலியை கண்ணீர் மல்க செலுத்தினார்.

அதன் பின் சிவகுமார், கார்த்தியுடன் சேர்ந்து நேராக விஜயகாந்தின் இல்லத்திற்கே சென்று பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தன் ஆறுதலை தெரிவித்தார் சூர்யா. எல்லாம் முடிந்து வெளியே வரும் போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.

இதையும் படிங்க: கிளிசரின் சேல்ஸ் அதிகமாச்சி!.. வெயி்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் ஃபர்பாமன்ஸ்!.. வச்சி செய்யும் பிரபலம்…

அப்போது பேசிய சூர்யா ஆரம்பகால படங்களில் தோல்வியையே கண்ட பொழுது எனக்காக பெரியண்ணா படத்தில் கேப்டன் நடித்துக் கொடுத்தார். அப்போது ஏகப்பட்ட விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

அவர் சாப்பிடும் போது அவர் தட்டில் இருந்து எனக்கு ஊட்டி விடுவார். டான்ஸ் சரியாக ஆட வராத போது மாஸ்டரை தனியாக அழைத்து கூடுதல் கவனத்தை கொடுக்க சொல்வார். அவருடன் இருந்த நாள்களை என்னால் மறக்க முடியாது. அந்தளவுக்கு மிக அக்கறையாக பார்த்துக் கொண்டார்.

இதையும் படிங்க: கோட் விஜய் படமா? தக் லெஃப் பதில் கொடுத்த பிரசாந்த்.. நீ படிச்ச ஸ்கூல நான் வாத்தியாருடா!

அவர் நினைவாக 25 வருடமாக நான் மர நாற்காலியில் உட்காரும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். கை உள்ள நாற்காலியில் உட்கார்ந்த போது அவருடைய நாற்காலியை கொடுத்து அமரச் சொல்வார். அதிலிருந்தே கேப்டன் நினைவாக எங்கு சூட்டிங்னாலும் அந்த மர நாற்காலியில் தான் உட்காருவேன் என்று சூர்யா கூறினார்.

அவர் செய்த உதவிகள், அவர் கடைப்பிடித்த கொள்கைகள் என எதையும் மறக்க முடியாது. நடிகர் சங்கம் சார்பாக கேப்டன் பெயர் சொல்லும் வகையில் எதாவதுசெய்ய வேண்டும் என்றும் சூர்யா கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!

Next Story