More
Categories: Cinema News latest news

சுயநலவாதியான சூர்யா! இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல.. ஆதங்கத்தில் பிரபலம்

Actor Surya: தமிழ் சினிமாவில் விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. சினிமாவையும் தாண்டி அவர் கல்வி சேவைக்காக செய்யும் செயல்கள் அனைவரையும் வியப்படைய வைக்கிறது. அகரம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்க வைத்து அதன் மூலம் ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாக்கி இருக்கிறார் சூர்யா.

இந்த நிலையில் வலை பேச்சு அந்தணன் சூர்யாவைப் பற்றி அவருடைய ஆதங்கத்தை ஒரு பேட்டியின் மூலம் கூறி இருக்கிறார். அதாவது சூர்யா சுதா கொங்கரா மீண்டும் இணைந்து புறநானூறு என்ற ஒரு படத்தை கொடுப்பதாக இருந்தது .ஆனால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் என்ற ஒரு தகவலும் வெளியானது. அதனால் அந்தப் படமும் அப்படியே நின்று போனது என்றும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: ஸ்ரீதேவியின் மகளுக்கு கொக்கி போட்ட சிலம்பரசன்… கூடவே இந்த சூப்பர்ஸ்டாருமாம்… ரைட்டே…

இதுதான் சூர்யா பண்ண ஒரு பெரிய தப்பு என அந்தணன் கூறி இருக்கிறார். ஏனெனில் தமிழகமெங்கிலும் பல்லாயிரம் மாணவர்களை படிக்க வைத்து அதன் மூலம் அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு ஆளாக்கி இருக்கிற சூர்யா இப்படிப்பட்ட ஒரு வரலாற்று காவியமான ஒரு படத்தில் நடிப்பது எவ்வளவு ஒரு பெருமை. அந்த படத்தில் இருந்து இவர் நடிக்காமல் போனது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.

தமிழரே அல்லாத ஒருவர் அதாவது சுதா கொங்கரா இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதே மிகப்பெரியது. அதில் சூர்யாவும் இணைவது ஒரு பிரம்மாண்டம். ஆனால் அதை விட்டு நடிக்க முடியாது என விலகிப் போனது சூர்யா செய்த மிகப்பெரிய தவறு என அந்தணன் கூறி இருக்கிறார். முதலில் புறநானூறு திரைப்படம் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து அமைந்த கதையாக எடுக்கப்பட இருந்தது.

இதையும் படிங்க: பாக்கியராஜ், அஜீத்தை விட ராமராஜன் ஒரு படி மேல… பிரபலம் சொல்றது இதுதான்..!

அந்த காலகட்டத்தில் மாணவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இந்த படத்தில் சில காட்சிகள் கண்டிப்பாக இருந்திருக்கும். இந்த படம் மட்டும் வெளியானால் அப்போதிருந்த மாணவர்களின் உணர்வும் இப்போது இருக்கும் மாணவர்களின் உணர்வும் எப்படி இருக்கிறது என்பது தெரியவரும். இன்றைய தலைமுறைகள் இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருந்திருக்கும்.

இந்தி தேவையா இல்லையா இந்தி திணிப்பு அவசியமா அவசியமில்லையா என்ற இடத்தில் நாம் இப்போது இருக்கிறோம். நம்முடைய மாணவர்கள் எவ்வளவு ஒரு பெரிய தியாகத்தை செய்து இந்திக்கு எதிராக எவ்வளவு பெரிய போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் என்பதை இப்போது உள்ள மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  அதை இந்த படம் கண்டிப்பாக உணர்த்தி இருக்கும்.

இதையும் படிங்க: ரெண்டு டீம்! எவ்ளோ பிஸியா இருந்தாலும் இத கண்டிப்பா செய்யனும்.. சூர்யா வீட்ல இப்படி ஒரு கண்டீசனா

ஹிந்தி தெரியாது போடா என்று அச்சிடப்பட்ட பனியனை சுற்றி கொண்டிருந்த காலம் போய் இப்பொழுது நம்முடைய படங்கள் ஹிந்தியில் வெளியாவதும் அங்கு போய் நடிப்பதும் என்பது மாதிரி காலங்கள் மாறிவிட்டன .இந்த வரிசையில் இப்போது சூர்யாவும் மாறிவிட்டார். அவர் ஒரு சீசன் வாரியாகவே இப்போது பார்க்கப்படுகிறார். ஐந்து வருடம் அவரின் போக்கு  ஒரு மாதிரியாகவும் 5 வருடம் கழித்து அவருடைய போக்கு வேறொரு மாதிரியாகவுமே பார்க்கப்படுகிறது.

அதுவும் இப்போது சூர்யா மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஹிந்தியில் படத்திலும் நடிக்க இருக்கிறார். பல படங்களை தயாரிக்கவும் இருக்கிறார். ஒருவேளை இதை கருதி கூட இந்த படத்தில் இருந்து விலகி இருக்கலாம் .அப்படி இருந்தால் அவரைவிட சுயநலவாதி வேறு யாருமில்லை என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Published by
Rohini