Cinema News
வடிவேலுவை யாரும் குறை சொல்லாதீங்க… வக்காலத்து வாங்கிட்டு வரும் பிரபல காமெடி நடிகர்…
Actor Vadivelu: வடிவேலு தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர். இவரின் காமெடிகள் அனைத்தும் மக்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கும். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் தேவர் மகன், சிங்கார வேலன், வரவு எட்டணா செலவு பத்தனா போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களிடையே தனது காமெடிகள் மூலம் பிரபலமானார்.
இவர் கிட்டதட்ட அனைத்து இயக்குனர்களின் படங்களிலும் நடித்துள்ளார் மற்றும் முன்னனி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். முதல்வன், காதலன் போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இதையும் வாசிங்க:ஐய்யயோ அவரு பொண்ண தொடமாட்டாரு! தெரியாம போய் மாட்டிக்கிட்டேன் – டி.ஆர் பண்ண அலும்பல் குறித்து சந்தானம் பேட்டி
வடிவேலு காமெடிகள் என்றாலே ரசிக்காதவர்கள் என இருக்கவே முடியாது. எம்டன் மகன், சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் இவரின் காமெடிகள் படத்திற்கு தனி சிறப்பினை பெற்று தந்தன. திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் இப்படியானால் நிஜ வாழ்வில் இவரின் மீது இவருடன் நடித்த சக நடிகர்கள் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தவண்ணம் உள்ளனர். இவர் தன்னுடன் நடித்த நடிகர்கள் எவருக்கு நிஜ வாழ்வில் எந்த ஒரு உதவியும் செய்தது இல்லை என பல பிரபலங்கள் குற்றம் சாட்டினர்.
இவருடன் இணைந்து நடித்தவர்களில் ஒருவர்தான் நடிகர் டெலிபோன் ராஜ். இவர் வடிவேலுவுடன் இணைந்து கிட்டதட்ட 20 திரைப்படங்கள் நடித்துள்ளார். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் எனும் காமெடியின் மூலம் பிரபலமடைந்தவர் டெலிபோன் ராஜ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலுவை இப்போது திட்டுபவர்கள் அனைவரும் அவரால் வளர்ந்தவர்களே.
இதையும் வாசிங்க:இத்தன பேர நடிக்க வச்சும் ஒருத்தரும் வரலயே!. இது என்னடா லியோ புரமோஷனுக்கு வந்த சோதனை!..
தற்போது அவர்களை பிரபலமாக்கி கொள்வதற்காகவே வடிவேலுவை இகழ்ந்து பேசுகின்றனர். சிங்கமுத்து, மீசை ராஜேந்திரன் போன்ற பலரும் நான் வடிவேலுவுக்கு ஆதரவாக பேசி வருவதால் தொலைபேசி வாயிலாக என்னை மிரட்டினர். மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடிகள் ஒழுங்காக அமையவில்லை என்றால் அதற்கு காரணம் இயக்குனரே தவிர வடிவேலு காரணம் அல்ல’ என கூறியிருந்தார்.
முன்னதாக வடிவேலுவின் காமெடிகள் வெற்றி அடைந்ததற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர்களின் எண்ணத்தில் காமெடி இருந்ததாகவும் அதனை வடிவேலு சிறப்பாக செய்ததாகவும், ஆனால் இப்போது உள்ள இயக்குனர்களின் எண்ணத்தில் காமெடிகள் இல்லை எனவும் அதனால்தான் வடிவேலுவின் காமெடிகள் ரசிக்கும்படி இல்லை எனவும் தெரிவித்தார். எனவே வடிவேலுவை இகழ்ந்து பேசுவது சரியல்ல, அவ்வாறு யார் பேசினாலும் நான் வடிவேலுவிற்கு துணையாக நிற்பேன் எனவும் கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க:தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரர் இவர்தானாம்! கோடீஸ்வரராக்கிய அந்த திரைப்படம் எது தெரியுமா?