நான் இப்படி நடிச்சா படம் ஓடாது!.. இயக்குனருக்கே விபூதி அடித்த தேங்காய் சீனிவாசன்...

then
Actor Thengai Seenivasan: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை நாம் கண்டு களித்திருக்கிறோம். ஆனால் கண்ணை உருட்டி உருட்டி அவர் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைக்கும் ஒரே நடிகர் தேங்காய் சீனிவாசன்.
காலங்கள் கடந்தாலும் இன்னும் அவரை போல ஒரு நடிகர் இந்த தமிழ் சினிமாவில் பிறக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திரவேடங்களிலும் வில்லன் வேடத்திலும் நடித்து மக்களை அதிகம் கவர்ந்தார்.
இதையும் படிங்க: சிவாஜி அப்படி சொன்னதை மறக்கவே மாட்டேன்!. யார் அப்படி சொல்லுவா?!. உருகிய தேங்காய் சீனிவாசன்.
எத்தனையோ படங்களில் தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தாலும் ரஜினியின் தில்லு முல்லு படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. ஏமாறுகிறோம் என்று தெரியாமல் ஏமாந்து கொண்டிருப்பார் அந்தப் படத்தில்.
இருந்தாலும் அதை சமாளிக்கும் விதம் இருக்கே? யாராலும் அதை செய்யவே முடியாது, இந்த நிலையில் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள் ஏராளம். அது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் நாம் வேலை பார்க்கும் துறைகளிலும் வரத்தான் செய்யும்.
இதையும் படிங்க: மாஸ்டர் பீஸா?.. மரண மொக்கையா?.. பிரபாஸின் சலார் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!
அப்படி வரும் பிரச்சினைகள் சுமூகமாக தீர்த்தாலே வேறெந்த பெரிய பிரச்சினையும் வராது. அப்படி சினிமாவில் வரும் பிரச்சினைகளை எளிதாக கையாளக் கூடிய திறன் பெற்றவராம் தேங்காய் சீனிவாசன். ஒரு சமயம் ஏதோ ஒரு படத்திற்காக தேங்காய் சீனிவாசனை வீட்டிலிருந்து வரும் போதே சட்டையில்லாமல் வரச் சொல்லியிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர்.
ஆனால் தேங்காய் சீனிவாசனுக்கு பிடிக்காத ஒன்று மேல் சட்டை அணியாமல் நடிப்பது. அதனால் இயக்குனர் சொன்னதையும் மீறி மேலே பனியனுடன் சென்றாராம். அதை பார்த்ததும் அந்த இயக்குனர் கடும் கோபத்தில் கத்தியிருக்கிறார்.
அதற்கு தேங்காய் சீனிவாசன் உங்கள் உதவியாளர் வந்து என்னிடம் சொன்னார். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சட்டை இல்லாமல் போகும் படம் இதுவரை ஓடியதே இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டே இன்று நான் பனியன் அணிந்து வந்தேன்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனா முதல் வேலையா ஓங்கி ஒரு அறைதான்! வனிதா சொன்ன அந்த போட்டியாளர்
வேண்டுமென்றால் கூறுங்கள். நான் பனியனை கழட்டி விடுகிறேன் என்று சொன்னாராம். இதன் பிறகுதான் என்ன நடந்திருக்கும் என எல்லாரையாலும் யூகித்துக் கொள்ள முடியும். இப்படி நகைச்சுவையாகவும் அதே வேளையில் பிரச்சினையில்லாமல் தப்பிக்கவும் சமயூகித புத்தியை பயன்படுத்துபவர் தேங்காய் சீனிவாசன் என சித்ரா லட்சுமணன் கூறினார்.