இளையராஜாவை முதன் முதலா பிளைட்ல அழைச்சிட்டு போனதே நான்தான்!.. யாருப்பா அவரு?..

தியாகராஜன் சினிமாத்துறையில் ஒரு ஆல் ரவுண்டர். நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர், ஆர்ட் டைரக்டர் என பன்முகத்திறன்களைக் கொண்டவர். இவர் நடிப்பில் வெளியான எல்லாப் படங்களுமே சூப்பர்ஹிட் தான். இளையராஜாவின் நெருங்கிய நண்பர்.

80களில் மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை, கொம்பேறி மூக்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் தியாகராஜன். இவரது மகன் தான் பிரசாந்த். இளையராஜாவுடனான தனது பயணம் குறித்து இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு...

மாமனார் சிவராம். அவரு கன்னடத்துல பெரிய டைரக்டர். 6 படத்துக்கு நேஷனல் அவார்டு கிடைச்சது. அவரை டைரக்ட் பண்ண வச்சி ரஜினி அதுல வில்லனா பண்ணினாரு. இளையராஜாவை நான் கன்னடத்துக்குக் கூட்டிட்டுப் போய் படம் பண்ண வச்சேன்.

வேற ஒரு படத்துக்காக ஸ்ரீலங்காவுக்கு அவரை கூட்டிட்டுப் போனேன். அங்க கம்போஸ் பண்ணினாரு. அது நடக்கல. முதன் முதலா பாரின் போனது இளையராஜாவுக்கு அதுதான். ஒரு சமயம் பூட்டாத பூட்டுகள் படத்தை என்னை ரிலீஸ் பண்ண வச்சாரு. ஜானி படத்தை நான்தான் தமிழ்நாட்டுல ரிலீஸ் பண்ணுனேன்.

Ilaiyaraja, Thiyagarajan

Ilaiyaraja, Thiyagarajan

டிஸ்டிரிபியூட் பண்ணப்போ அது நிறைய பிரச்சனையா இருந்தது. அப்போ படம் தயாரிக்க ஆரம்பிச்சது தான் அலைகள் ஓய்வதில்லை. அது ஹிட்டானதும் நிறைய வாய்ப்பு வந்தது. சினிமாவுல எல்லா டெக்னிக்கும் கத்துக்கிட்டேன். பூவுக்குள் பூகம்பம் படத்துல நானே ஆர்ட் டைரக்டரானேன். இளையராஜாவை நான் தான் முதல் முதலா பிளைட்ல அழைச்சிட்டுப் போனேன்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... அந்த எம்.ஜி.ஆர் படத்தில் பிடிக்காமல்தான் நடித்தேன்!. ஓப்பன் பேட்டி கொடுத்த ஜெயலலிதா!..

தியாகராஜன் சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் தொழில் அதிபராகவே இருந்துள்ளார். அவர் பாரதிராஜா, இளையராஜாவுடன் நல்ல நட்பு கொண்டு இருந்தார். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமாகத் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story