Connect with us
thiyagu

Cinema News

விஜயகாந்தை குடிகாரன்னு சொன்னா எவனா இருந்தாலும் அடிப்பேன்!.. சீறும் தியாகு!..

Vijayakanth: மறைந்த நடிகர் விஜயகாந்தின் நட்பு வட்டாரத்தில் மிகவும் முக்கியமானவராகவும், விஜயகாந்தின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தவர் நடிகர் தியாகு. விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களில் அரசியல்வாதியாக நடித்திருப்பார். அவருக்கும், விஜயகாந்துக்கும் நீண்ட கால நட்பு உண்டு.

விஜயகாந்த் சினிமாவுக்கு வந்த புதிதில் இருந்தே இருவருக்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் விஜயகாந்த் மரணமடைந்த நிலையில் அவரை பற்றிய பல தகவல்களை தியாகு பகிர்ந்து கொண்டார். விஜயகாந்தை குடிகாரன் என சொன்னால் யாராக இருந்தாலும் உதைப்பேன். அவன் கடுமையான உழைப்பாளி. என்னுடை பல வருட நண்பன் என்பதால் ‘அவன் இவன்’ என சொல்கிறேன். அதை மரியாதை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் வேறலெவல் வில்லனாக நடித்த படங்கள்.. ஏழாம் அறிவு டாங்லீக்கே முன்னோடி கேப்டன்தானாம்!

அவரின் மரணத்தில் நடிகர் சங்கம் நடந்து கொண்டது எனக்கு பிடிக்கவில்லை. நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது மலேசியா, சிங்கப்பூர் சென்று கலைநிகழ்ச்சி நடத்தி கடனை அடைத்து ஒரு கோடியே 70 லட்சம் இருப்பு வைத்தான். ஆனால், அவர் இறந்தபோது அதே நடிகர் சங்கம் உரிய மரியாதையை செய்யவில்லை.

நடிகர் சங்கம் சார்பில் ஒரு மலர் வளையம் கூட வைக்கவில்லை. இதை சங்கத்தின் பொருளாளர் கார்த்தியே ஒப்புக்கொண்டார். அதனால், நடிகர் சங்கம் நடத்திய இரங்கல் கூட்டத்திற்கு அவர்கள் அழைத்தும் நான் கலந்துகொள்ளவில்லை. நான் ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார்.

இதையும் படிங்க: வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?

உடனே நான் கும்பகோணம் போனேன். ஒரு மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை. 4 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். விஜி எனக்கு போன் செய்து ‘நான் வரட்டுமா?’ எனக்கேட்டான். நான் வேண்டாம் என்றேன். ஆனாலும் அடுத்த நாள் 500 கார்கள் அவன் பின்னால் வர என என் வீட்டுக்கு வந்தான். என் வீடு மெயின் ரோட்டில் இருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது.

எஸ்.பியே என் வீட்டிற்கு வந்துவிட்டார்.. ‘என் நண்பன் மரணத்திற்கு வந்திருக்கிறேன். கொஞ்சம் நேரம் காத்திருங்கள்’ என விஜயகாந்த் சொன்னதை அவர் கேட்கவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ‘காரை எடுக்க முடியாது என உங்கள் அமமா (ஜெயலலிதா)விடம் சொல்லுங்கள் என கத்தினான் விஜி. பிரச்சனை வேண்டாம் என சொல்லி அங்கிருந்து அவனை அனுப்பி வைத்தேன்.

அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபோது அவனை போய் பார்ப்பேன். என் கையை பிடித்துக்கொண்டு அழுவான். என் மீது அவனுக்கு அப்படி ஒரு பாசம்’ என கண்ணீர் மல்க பேசினார் தியாகு.

இதையும் படிங்க: விஜயகாந்த் அதை யாரிடமும் சொன்னதே இல்லை!.. அவர் போல ஒரு மனிதர்!.. உருகும் பிரபலம்….

google news
Continue Reading

More in Cinema News

To Top