Cinema News
என் பையனோட வேல்யூ கமலுக்கு இப்போ தெரிஞ்சிருக்கு! அதான் கூப்பிட்டாரு.. வாயை கொடுத்து மாட்டிக்கினாரோ டிஆரு
Actor T.Rajendran: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் பீக்கில் இருக்கும் போது தன்னுடைய தனித்துவமான நடிப்பு மற்றும் திறமையால் ஒரு பக்கம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தவர் நடிகர் டி.ராஜேந்திரன். பன்முகத்திறமை வாய்க்கப்பெற்ற இவர் தன் மகன் சிம்புவையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிக்கேற்ப சிம்புவும் டி.ஆரை போலவே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். நடிப்பு, நடனம், இயக்கம், தயாரிப்பு, பாடல் . இசை என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார்.
இதையும் படிங்க: சந்தானம் சம்பளம் அளவுக்காவது வடக்குப்பட்டி ராமசாமி வசூல் வருமா?.. இன்னும் பிக்கப் ஆகலையே பாஸ்!..
நேற்று சிம்புவின் பிறந்த நாள் என்பதால் டி.ஆர் பல்வேறு உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினார். அப்போது அவரை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்களிடம் டி.ஆர் ‘இதுவரை சிம்புவின் பிறந்த நாளன்று ஆங்காங்கே அன்னதானம் வழங்கி வருகிறேன்.அதை போல சிம்புவும் வலது கைக்கு கொடுக்கிறது இடது கைக்கு தெரியாததை போல சிம்புவும் யாருக்கும் தெரியாமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.’
‘அதனால் இனிமேல் இதையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர தனியாக ஒரு அறக்கட்டளை மூலம் இந்த உதவிகளை செய்ய இருக்கிறோம். அதற்காக விரைவில் அறக்கட்டளை நிறுவவும் முடிவு எடுத்திருக்கிறோம்’ எனக் கூறினார். இந்த நிலையில் விஜயின் அரசியல் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க அதற்கு டிஆர் ‘ நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எதை பற்றி கேட்கிறீர்கள் என கூறி விஜயின் அரசியல் பற்றி எதுவும் இல்லை விமர்சனம். தமிழர்களுக்கு இப்போதைக்கு தேவைப்படுவது விமோச்சனம்’ என அவர் பாணியில் சொல்லி முடித்தார்.
இதையும் படிங்க: டெத் டிராமா இப்படி வேட்டு வைக்கும் நினைக்கலையே!.. 5 வருஷத்துக்கு ஜெயிலா?.. பூனம் பாண்டேவுக்கு ஆப்பு!
அதை போல சிம்புவின் வளர்ச்சியையும் பற்றி கூறிய டிஆர் ‘கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிதான் இப்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு சிம்புவின் வேல்யூ இப்போ தெரிஞ்சிருக்கு. ஏனெனில் சிம்புவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவிற்குள் வந்தவர். அதனால்தான் கமல் சிம்புவை கூப்பிட்டாரு’ என சிம்புவின் ராஜ்கமல் நிறுவனத்துடனான படத்தை பற்றி கூறினார்.