ஆல் இன் அழகுராஜாவா மாஸ் காட்டப் போகும் வடிவேலு! ‘சந்திரமுகி 2’வில் இப்படி ஒரு திருப்பமா?
பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சந்திரமுகி 2. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. படத்தில் லாரன்ஸுக்கு இணையாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தன் நடிப்பை காட்ட இருக்கிறார். சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் நடிப்பை பார்க்க அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து ராதிகா, வடிவேலு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். இந்தப் படம் விநாயகர் சதுர்த்தி நாளில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதையும் படிங்க : ‘கில்லி’ விஜய்னு நினைச்சி போனா அது முட்டாள்தனம்! மனசுல ஒன்னும் வெளில ஒன்னும் வச்சு பேசுராறோ?
அதில் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள். பி.வாசு பேசும் போது சந்திரமுகி 2 படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகளை கூறினார். அதாவது சந்திரமுகி 1 ஒரு மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட். அப்படி இருக்கும் போது இந்தப் படத்தில் ஏன் முதல் பாகத்தில் இருந்த நடிகர்களை போடாமல் புதியதாக ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்தீர்கள் என நிருபர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த வாசு, இது முற்றிலும் வேறு கதை எனவும் முதல் பாகத்தில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் அந்தப் படத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது எனவும் அந்த வீட்டில் தான் பிரச்சினையே ஒழிய நடித்த கேரக்டர்கள் மேல் இல்லை. அதனால் மறுபடியும் அந்த வீட்டிற்கு வரும் ஒரு புதிய குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இந்த சந்திரமுகி 2.
இதையும் படிங்க : இவ்வளவு கலெக்ஷனா?!.. எதிர் நீச்சல் ரேணுகா செய்த சூப்பர் ஷாப்பிங்!.. வைரலாகும் வீடியோ
மேலும் வடிவேலு தான் அந்த வீட்டில் இருக்கும் பொதுவான நபர். இப்பொழுது அந்த வீடு வடிவேலுவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் அந்த வீட்டில் வேறு யாரையாவது குடியமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவேலு செயல்படுவதுதான் கதை. அவர்தான் கதைமுழுக்க ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று வாசு கூறினார்.