மேடையில அப்படித்தான் பேசுவோம்... இளம் நடிகருக்கு ஷாக் கொடுத்த வடிவேலு...

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். காமெடி படங்களை இயகி வரும் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’என்கிற தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரும் வெளியானது.
இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ‘சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன்.. மேலும், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும் நடிப்பேன்’ என கூறினார் வடிவேலு.
இதை நம்பி ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் அவரை தொடர்பு கொண்டு எங்கள் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்களாம். ஆனால், அவர்களுக்கு சாதகமான பதிலை வடிவேலு இதுவரை கூறவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.
சந்தானம் போல இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். ஆனால், இதை அவர் வெளியே யாரிடமும் கூறவில்லை. சிவகார்த்திகேயன் தனது டான் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், அது நடக்கவில்லை. ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2-வில் வடிவேலுவை நடிக்க விரும்புகிறார். இது நடக்குமா என தெரியவில்லை.
வடிவேல் பேசுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது....