1992 ஆம் ஆண்டு இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கத்தில் ”சின்னத்தாய்” என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் விக்னேஷ். இளவட்ட தோற்றத்துடன் சினிமாவிற்கு தேவையான முக அமைப்பு கொண்டிருந்ததால் முதல் படத்திலே மக்களின் மனதில் பதிய தொடங்கினார். அதன் பிறகு கிழக்குச் சீமையிலே படத்தில் சீனு எனும் கதாபாத்திரத்தில் ”ஆத்தங்கர மரமே” என்ற பாடலின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் விக்னேஷ்.
தன்னுடைய எதார்த்த நடிப்பால் அடுத்தடுத்த படங்களைப் பெற்று தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். இருந்தாலும் இன்று வரை அவருக்கு பெயர் சொல்லும் படம் என்றால் அது கிழக்குச் சீமையிலே தான். 1992 முதல் 2018 ஆம் ஆண்டு வரை விக்னேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இருந்தபோதிலும் அவருக்கான அடையாளம் அங்கீகாரம் என்பது இதுவரை கிடைக்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இவரின் முகம் மக்களுக்கு அடையாளம் தெரியாமலே இருக்கிறது. இவரின் ஒரே அடையாளம் கிழக்கு சீமைமயிலே படம் மட்டும்தான்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரவேண்டிய இவர் இங்கு தவறவிட்டார் மேலும் அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் என் வாழ்க்கையை மொத்தமாக நானே முடிச்சுட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,” கிழக்குச் சீமையிலே படம் முடித்தவுடன் எனக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தது. ஒரே நேரத்தில் 8 படங்கள் வரைந்தது. எல்லாமே சிறிய கம்பெனி படங்கள் புதுமுகம் இயக்குனர்கள் தான். எனக்கு அந்த நேரத்தில் அவ்வளவு தெளிவு இல்லை. ஏனென்றால் படத்தில் நடிக்க ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு நடிக்க சென்று விடுவேன்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் கிழக்குச் சீமையிலே படத்துக்கு அப்புறம் ஒரு சில பெரிய டைரக்டர்கள் பெரிய கம்பெனி படங்கள் வந்தது. இவர்களுக்கு முன்னாடியே நான் அந்த சின்ன படங்களில் கமிட் ஆகிட்டேன். அதனால் என்னிடம் கால்ஷீட் இல்லை. அந்தப் பெரிய டைரக்டர்கள் கேட்ட தேதியை என்னால் கொடுக்க முடியவில்லை. மேலும் நான் தெரியாமல் அந்த கம்பெனியில் படம் பண்ணி அவர்களும் படத்தை முழுவதுமாக முடிக்காமல் 10, 20 நாட்களில் எல்லாம் படம் நின்று விட்டது”.
”அப்படி நிறைய படங்கள் எனக்கு தடைபட்டு போச்சு. அந்த வயதில் எனக்கு பணம் நிறைய கிடைத்ததால் அதை என்னுடைய இஷ்டத்திற்கு செலவு செய்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் எனக்கு நிறைய படங்கள் கிடைக்காமல் போச்சு. இது எல்லாமே என் தவறுதான். சினிமாவில் இங்கு யாரும் யாருக்கும் வாழ்க்கை கொடுத்ததில்லை. அந்தத் தனி நபருடைய தனித் திறமை தான் வாழவைக்கும்”.
”அப்படி என்னுடைய தனித் திறமையை காட்ட நான் தவறிவிட்டேன் என்று நினைக்கிறேன்”. என்று இந்த பேட்டியில் மன வருத்தத்துடன் கூறியுள்ளார் விக்னேஷ். கிழக்குச் சீமையிலே படத்தில் இவர் நடிப்பு பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து கிடைக்கப்பெற்ற பட வாய்ப்புகளில் சரியான கதையை தேர்வு செய்து நடித்திருந்தால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்திருப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை.
