Connect with us
kanth

Cinema History

கேப்டனுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ரெஸ்ட்!.. கால்ஷீட்டே இல்லாம நடித்துக் கொடுத்த படம்!.. அங்க நின்னாரு மனுஷன்..

தமிழ் சினிமாவே ஆச்சரியப்படுகிற ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து இன்று தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி இருக்கிறார். இன்றைய தலைமுறைகள் பார்த்து வியந்து நிற்கிற மாமேதையாக திகழ்கிறார் விஜயகாந்த்.

kanth1

vijayakanth

வில்லனாக நடித்து அதன் பின் ஹீரோவாக அவதாரம் எடுத்த கேப்டன் மக்கள் தொண்டே மகேஷன் தொண்டு என்ற அடிப்படையில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். அந்த செயல் அரசியலுக்கு வழிவகுத்தது. யாரையும் மனம் நோகாமல் பேசுவதை வழக்கமாக கொண்டவர் கேப்டன்.

இதையும் படிங்க : இதுவரை ரஜினிகூட நடிக்காத பிரபல நடிகை!.. ‘முத்து’ பட வாய்ப்பு வந்தும் அவரிடம் மறைத்த சோகமான சம்பவம்..

எந்த நேரத்தில் என்ன உதவியாக இருந்தாலும் சளைக்காமல் செய்பவராக இருந்தார். மேலும் தன்னால் தான் நடிக்கும் படத்திற்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தபிறகு சொந்த செலவிலேயே வேலை செய்யும் ஊழியர்களுக்கு தான் சாப்பிடும் உணவுகளை அவர்களுக்கும் வழங்க செய்தார்.

kanth2

vijayakanth

ஏவிஎம் நிறுவனத்துடன் சேர்ந்து 4 படங்களில் வேலை செய்துள்ளார் விஜயகாந்த். ஒரு சமயம் ஏவிஎம் நிறுவனத்தயாரிப்பில் ‘சிவப்பு மல்லி’ என்ற படம் தயாராக இருந்தது. அதற்கு முதலில் வேறொரு நடிகரை நடிக்க வைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. ஆனால் ஏவிஎம் சரவணன் விஜயகாந்த்தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : பெண் இயக்குனரின் மனதை காயப்படுத்திய எம்.ஜி.ஆர்… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது??

விஜய்காந்திடம் கேட்க அவரிடம் கால்ஷீட் இல்லையாம். வேறொரு படத்தில் கமிட் ஆகிவிட்டாராம். ஆனாலும் விஜயகாந்த் நான் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஏவிஎம் சரவணனுக்கோ ஒன்றுமே புரியவில்லையாம். கால்ஷீட் இல்லாம எப்படி நடிப்பார் என்று யோசிக்க இரவு முழுவதும் சிவப்பு மல்லி படப்பிடிப்பில் இருப்பாராம்.

kanth3

vijayakanth

பகல் முழுவதும் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பாராம். அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்க படம் ஆரம்பித்து 35 நாள்களில் படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர். படமும் நல்ல வரவேற்பை பெற்றதாம். இவருடன் சேர்ந்து சிவப்பு மல்லி படத்தில் வாகை சந்திரசேகரும் நடித்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top