Connect with us
rajini vijay

Cinema History

ரஜினிக்கு எழுதிய கதையில் நடித்த விஜய்!.. அட அந்த மாஸ் படமா?!.. தெரியாம போச்சே!..

Rajini vijay: திரைத்துறையை பொறுத்தவரை ஒரு இயக்குனர் ஒரு கதையை எழுதி அதன்பின் அதில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசிப்பார். சில சமயம் எந்த ஹீரோவின் கால்ஷீட் இருக்கிறதோ அவரை வைத்து இயக்குனர்கள் படம் எடுப்பார்கள். சில இயக்குனர்கள் இந்த கதையில் இந்த ஹீரோ மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

சில இயக்குனர்கள் ஒரு குறிப்பிட்ட ஹீரோவுக்காக மட்டுமே அந்த கதையை எழுதுவார்கள். ரஜினி, கமல் எல்லாம் அந்த கேட்டகிரிதான். ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கினால் அவரின் ரசிகர்களை பிடிக்கும் வகையில் மாஸ் காட்சிகள், பன்ச் வசனங்கள் வைக்க வேண்டும். இல்லையேல் அவரின் ரசிகர்களுக்கு திருப்தி ஏற்படாது. இப்போது விஜய் கூட அந்த கேட்டகிரிக்கு வந்துவிட்டார்.

இதையும் படிங்க: சினிமா மோகம்.. நடிகர் பின்னால் கூட்டம்!.. இனிமேலாவது கவுண்டமணி சொல்றத கேளுங்கப்பா!..

அதேபோல், ஒரு ஹீரோவுக்கு எழுதப்பட்ட கதையில் மற்றொரு ஹீரோ நடிப்பதும் திரையுலகில் அதிகம் நடக்கும். ஷங்கரின் எந்திரன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் கமல். அதேபோல், இந்தியன் படத்தை ரஜினியை மனதில் வைத்து எழுதியிருந்தார் ஷங்கர். முதல்வன் படத்திற்காக கூட ஷங்கர் முதலில் ரஜினியைத்தான் அணுகினார்.

இப்படி விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் விக்ரம், அஜித்துக்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா என பல மாற்றங்கள் நடக்கும். அதேநேரம், ரஜினிக்காக ஒரு இயக்குனர் எழுதிய கதையில் விஜய் நடித்த சம்பவத்தை இங்கே பார்க்க போகிறோம். 90களில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ்.

இதையும் படிங்க: திரையுலகில் திடுக்கிடும் பாலியல் புகார்கள்… தொடர்வதன் பின்னணி ரகசியம் இதுதானா…?

இவர் ரஜினிக்காக ஒரு மாஸ் கதையை எழுதினார். ஆனால், ரஜினியை அவரால் சந்திக்கவே முடியவில்லை. எனவே, அந்த கதையில் விஜயை நடிக்க வைத்தார். இந்த கதையை அவர் விஜயிடம் சொன்னதும் ‘கதை இவ்வளவு மாஸா இருக்கே.. எனக்கு செட் ஆகுமா?’ என விஜய் கேட்டுள்ளார்.

bagavathi

அப்படிக்கேட்டு விஜய் நடித்த படம்தான் 2002ம் வருடம் வெளிவந்த பகவதி. இந்த படத்தின் கதை பாட்ஷா பட ஸ்டைலில் இருக்கும். விஜய் பெரிய டான் போல வருவார். தம்பியின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்ணை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற போராடுவார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட படமாக பகவதி வெளியானது.

இதையும் படிங்க: மொத்த யூனிட்டும் எதிர்ப்பு… விடாப்பிடியாக இருந்த பாலசந்தர்… சாதித்துக் காட்டிய வைரமுத்து!

google news
Continue Reading

More in Cinema History

To Top