தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக ஒருதகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை, விஜயின் அடுத்தப் படத்தை பற்றிய பேச்சுவார்த்தைத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
கோட் திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.இந்த நிலையில் விஜய் அடுத்ததாக அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். அரசியல் செயல்பாடுகளில் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த்.
அரசியல் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளானாலும் அதை ஒழுங்குப்படுத்தி கொண்டு செல்வதில் புஸ்ஸீ ஆனந்த் விஜய்க்கு நம்பிக்கைக்குரியவராகவே திகழ்ந்து வருகிறார். அதே சமயம் சில நேரங்களில் புஸ்ஸீ ஆனந்தின் செயல்பாடுகள் ரசிகர்களை எரிச்சலடையவும் வைக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.
அதாவது சமீபத்தில்தான் புஸ்ஸி ஆனந்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விஜயே தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடவேண்டாம் என அறிவித்திருந்த நிலையில் புஸ்ஸீ ஆனந்தின் பிறந்த நாளுக்கு ஆளுயர கட்டவுட் வைத்து ஒரே அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். இதிலும் விஜயின் பெருந்தன்மையை பாராட்டவேண்டும்.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தன்னை விட தன் கூட இருக்கும் ஒருவருக்கு பெரிய அந்தஸ்தை கொடுக்க விடமாட்டார்கள். ஆனால் விஜய் புஸ்ஸீ ஆனந்திற்கு இந்தளவு இடம் கொடுத்திருக்கிறார். காலப்போக்கில் புஸ்ஸீ ஆனந்தின் கட்சியில் விஜய் என்றளவுக்கு வந்து விடும் போலிருக்கிறது. இது ஒரு வகையில் அதிகப்பிரசிங்கத்தனமாகவே தெரிகிறது.
மக்கள் எதிர்பார்ப்பது என்ன? இன்று தமிழ் நாட்டில் இருபெரும் கட்சிகளாக இருக்கும் திமுக,அதிமுகவின் அலப்பறைகளை இத்தனை வருடங்களாக பார்த்துவிட்டார்கள். ஒரு மாற்று கட்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை போல் இவர்களும் அலப்பறை ஆர்ப்பாட்டம் என இருந்தால் அவ்வளவுதான். இதை புரிந்து விஜய் தனது அரசியல் கட்சியை கொண்டுவந்தால் நல்லது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
