மாட்டிக்கினாரு ஒருத்தரு.. அவரை காப்பாத்தணும் கர்த்தரு!.. கடைசியா கட்சியை அறிவித்த விஜய்!..

by சிவா |   ( Updated:2024-02-02 08:19:28  )
vijay
X

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். விஜயின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என மாற்றினார். அடிக்கடி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வந்தார். கிட்டத்தட்ட கடந்த 6 வருடங்களுக்கும் மேல் இந்த சந்திப்பு நடந்து வந்தது.

notice

ஒருபக்கம், தான் நடிக்கும் படங்களில் அரசியல் பன்ச் வசனங்களையும், அரசியல்வாதிகளை விமர்சிக்கும் வகையிலும் அவர் பேசி வந்தார். இதற்காக வருமானவரித்துறையை எல்லாம் அவர் சந்தித்தார். இந்நிலையில்தான், சமீபத்தில் அவரின் அரசியல் நடவடிக்கை தீவீரமாகியது. அவரின் கட்சி பெயர் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கட்சியில் ஆள் சேர்க்க விஜய் போடும் மெகா பிளான்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

இந்நிலையில்தான், தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்திருக்கிறார் விஜய். இது தொடர்பாக தனது டிவிட்டரில் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

notice

அதோடு, இப்போது நடித்து வரும் படத்தை முடித்தபின் முழுமையான அரசியல் பணி என குறிப்பிட்டுள்ளார். எனவே, கோட் படத்திற்கு பின்னால் விஜய் படம் நடிப்பாரா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் விஜய் தனது கட்சி பெயரை அறிவித்துள்ள நிலையில் இது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், மகி்ழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

notice

எனவே, விஜயின் ரசிகர் மன்றத்தினர் தமிழகமெங்கும் மக்களுக்கு இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். விஜயின் அரசியில் வருகை தமிழகத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.

Next Story