விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.

Vidamuyarchi: தமிழ் திரையுலகில் விஜயும் அஜித்தும் பல வருடங்களாகவே போட்டி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இருவரும் ஒரே கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி ஒன்றாகவே வளர்ந்தவர்கள்தான். இருவருமே காதல் கதைகளில் நடிக்க துவங்கி பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியவர்கள்.

இப்போது இருவரும் மாஸ் நடிகர்களாக மாறிவிட்டனர். இருவருக்கும் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்கள் ஒருபக்கம் டிவிட்டரில் ஹேஷ்டேக் மூலம் அசிங்கமாக திட்டி சண்டை போட்டு வருகின்றனர். இதை தடுக்க விஜயும் சரி, அஜித்தும் சரி எந்த தீவிரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை பார்த்து உருவான அஜித் படம்!.. கடைசியில் ரிசல்ட் இதுதான்!..

ஒருபக்கம் விஜய் தொடர்பான ஒரு செய்தி வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டால் அதை திசை திருப்புவது போல அஜித் பற்றி ஒரு செய்தியோ அல்லது அவரின் புகைப்படமோ வெளியாகும். இதையேதான் விஜயும் செய்வார். அஜித்தின் படம் தொடர்பாக செய்தி வெளியாகும்போது விஜய் படம் தொடர்பான ஒரு அப்டேட் வெளியாகும்.

vijay

இதைப்பார்க்கும்போது வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இருவருக்கும் இடையே பனிப்போர் என்பது நீடித்து வருகிறது. பொதுவாக விஜய் படம் வெளியாகும்போது அஜித் படம் வெளியாகாது. ஆனால், வாரிசு படம் வெளியாகும் அதேநாளில் தனது துணிவு படமும் வெளியாகவேண்டும் என்பதில் கறாராக இருந்தார் அஜித்.

இதையும் படிங்க: இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!. விஜயும் – அஜித்தும் இத கத்துக்கணும்!

தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என எல்லோரும் சொல்லியும் கூட அவர் கேட்கவில்லை. கடைசியில் இரண்டு படங்களும் நல்ல லாபத்தை கொடுத்தது. இப்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் துவங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னமும் ஃபர்ஸ்ட்லுக் கூட வெளியாகவில்லை. இப்போது அது வெளியாவது விஜயின் கையில்தான் இருக்கிறது.

ajith

புரியவில்லையா?. அதாவது விஜயின் அரசியல் கட்சி விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. அப்படி அது நடக்கும் நாளில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகட்டும் என் அஜித் நினைக்கிறாராம். ஏனெனில், விஜயின் கட்சி பெயர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுவதை டைவர்ட் செய்யவே அஜித் இதை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட விஜயின் அரசியல் தொடர்பான செய்திகள் பரபரப்பான போது அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்தான் டார்கெட்டா?!. அஜித் போட்டோஸ் வெளிவரதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!. அடங்கப்பா!

 

Related Articles

Next Story