இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் - சிவாஜி!. விஜயும் - அஜித்தும் இத கத்துக்கணும்!

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்திலும் இது இருந்தது. ஆனால், அவர்களுக்குள் ஒரு கண்ணியமும், நாகரீகமும் இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் அப்படி இல்லை. ஒருவரின் காலை வாரி விட மற்றொருவர் எப்போதும் காத்து கொண்டிருப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் அவ்வளவு அசிங்கமாகவும், கீழ்த்தரமாகவும் நடந்து கொள்கிறார்கள். ஆபாசமான வார்த்தைகளை வைத்து ஹேஷ்டேக் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர். விஜயை மிகவும் அசிங்கமாக திட்டி அஜித் ரசிகர்களும், அஜித்தை மோசமாக திட்டி விஜய் ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டு ஆர்கசம் அடைந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் பாடியதை தூக்கிவிட்டு எஸ்.பி.பி-ஐ பாட வைத்த இளையராஜா!.. சிவாஜி படத்தில் நடந்த சம்பவம்..

பல வருடங்களாகவே இது நடந்தாலும் அஜித்தும் விஜயும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில் அப்படி அவர்கள் மோதிக்கொள்வதுதான் நமக்கு நல்லது என நினைக்கிறார்களோ என்னவோ!. ஒரேமுறை ‘ஒருவரை புகழந்து பேசுவதற்காக ஒருவரை திட்டாதீர்கள்’ என அஜித் ஒரு அறிக்கை விட்டார்.

ajith vijay

அதேபோல், லியோ பட விழாவில் பேசிய விஜய் ‘சோஷியல் மீடியாவுல ஏன் இவ்வளவு கோபம்?’ என சிரித்துக்கொண்டே கேட்டார். இவ்வளவுதான் அவரின் ரியாக்‌ஷன். இப்போது அஜித் - விஜய் சண்டை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், 60 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் சிவாஜியும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

இதையும் படிங்க: இரண்டு நடிகர்கள் நடித்து தூக்கப்பட்டு 3வதாக சிவாஜி நடித்த படம்!.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் இதுதான்..

அப்போது பிரபலமாக இருந்த ஒரு வாரப்பத்திரிக்கை சிவாஜி, எம்.ஜி.ஆரை வைத்து ‘நான் விரும்பும் நட்சத்திரம்’ என் என்கிற தலைப்பில் ஒரு சர்வே-வை எடுக்க விரும்பியது. ரசிகர்கள் தங்களுக்கு யாரை பிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிட வேண்டும். ஆனால், ‘இப்படி ஒரு சர்வே நடத்த வேண்டாம்.. இது அவசியம் இல்லாதது’ என எம்.ஜி.ஆர் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.

mgr sivaji

அதேபோல், சிவாஜியும் ‘இது தேவையில்லாதது. எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை. எனவே, இப்படி ஒரு சர்வே தேவையில்லை. இதை நான் விரும்பவில்லை’ என கடிதம் எழுதினார். இருவரும் கேட்டு கொண்டதால் அந்த சர்வே நடத்தப்படவில்லை. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ரசிகர்களை எப்படி பார்த்தார்கள் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம்.

இப்போது விஜயும் அஜித்தும் என்ன செய்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்த்தால் இவர்கள் எப்படி என்பது ரசிகர்களுக்கு புரியும்!..

இதையும் படிங்க: மியூசிக் போடாமலேயே முழுப்பாடலுக்கும் நடித்து முடித்த சிவாஜி… எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!…

 

Related Articles

Next Story