மியூசிக் போடாமலேயே முழுப்பாடலுக்கும் நடித்து முடித்த சிவாஜி... எப்படி நடந்ததுன்னு தெரிஞ்சா அசந்துருவீங்க!...

by sankaran v |
Sivaji
X

Sivaji

தமிழ்த்திரை உலகில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது. அவரது படங்களில் அவர் உச்சரிக்கும் வசனம், முகபாவனைகள் போல வேறு எந்த நடிகருக்கும் வராது. அவரை தமிழ்சினிமாவின் அகராதி என்றே சொல்லலாம். இந்த இடத்தில் நாம் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் அவரது அபாரமான நினைவாற்றல். இதை ஒரு சுவையான சம்பவத்தின் வாயிலாக பார்க்கலாமா...

இதையும் படிங்க... ஃபிளைட்ல ஹன்சிகா பண்ண வேலை!.. சொல்லி சொல்லி சிரிக்கும் சிவகார்த்திகேயன்…

அவன்தான் மனிதன் சிங்கப்பூரில் நடந்தது. அனைத்துக் கலைஞர்களும் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கின்றனர். இயக்குனர் திருலோகச்சந்தரிடம் உதவியாளர் ஒருவர் ஓடி வந்து ஒரு விஷயம் சொல்கிறார். அவரோ செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

இதற்குள் படப்பிடிப்புக்குழுவினர் அனைவருக்கும் தகவல் தெரிந்து விடுகிறது. எல்லோருமே என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர். நடிகர் திலகத்தின் படப்பிடிப்பு ஒரு நிமிடம் கூட வீணாகக்கூடாது என்று நினைத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கவலை வந்து விட்டது.

இதை நடிகர் திலகத்திடம் எப்படி சொல்லி சமாளிப்பது என கையைப் பிசைகின்றனர். ஒருவழியாக அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விடுகின்றனர். எல்லோரும் தடுமாறக் காரணம்... அவர் நடிக்க வேண்டிய பாடலின் ஒலிநாடா பெட்டியை அன்று கொண்டு வரவில்லை. ஆனால் அந்தப் பாடலையும் அன்றே படமாக்க வேண்டும். அதற்குப் பதிலாக வேறு ஒரு பாடலைக் கொண்டு வந்து விட்டனர்.

இதையும் படிங்க... அலட்சியம் செய்த எம்.எஸ்.வியை கதறி அழ வைத்த பட்டுக்கோட்டையார்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?

சென்னையில் பாடல் பதிவு நடந்த போது படத்தின் எல்லாப் பாடல்களையும் சிவாஜி ஏற்கனவே கேட்டு இருந்தார். அவை அப்படியே அவரது மனதில் மனப்பாடமாக இருந்தன. அவரது அபாரமான நினைவாற்றல் படப்பிடிப்புக் குழுவினருக்கும் பல சமயங்களில் கைகொடுத்தன. அப்படித்தான் இந்த இக்கட்டான சூழலிலும் அவரது நினைவாற்றல் கைகொடுத்தது.

அவர் ஏற்கனவே கேட்டு இருந்த பாடலை மனதில் இருத்தி அதை மனதில் முணுமுணுத்தவாறே அந்தப் பாடலைக் கொஞ்சம் கூட பிசகாமல் நடித்துக் கொடுத்தார். அது தான் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடல். இப்போது பார்த்தாலும் அந்தப் பாடல் வரிகளுக்கான உச்சரிப்பு அப்படியே பொருந்தும் அளவில் தத்ரூபமாக இருக்கும். இப்போதும் நீங்கள் யூடியூப்பில் இந்தப்பாடலைப் போட்டுப் பாருங்கள். சிவாஜியின் உதட்டசவை அவ்வளவு அருமையாகக் காட்டுவார்கள். பாடலின் வரிகளை அவ்வளவு அருமையாக உச்சரித்து இருப்பார். அதுதான் நடிகர் திலகம்.

Next Story