ஃபிளைட்ல ஹன்சிகா பண்ண வேலை!.. சொல்லி சொல்லி சிரிக்கும் சிவகார்த்திகேயன்...
Sivakarthikeyan: மும்பையை சேர்ந்த ஹன்சிகா மிகவும் சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தார். ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் தெலுங்கு படங்களில்தான் முதலில் நடித்தார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.
குஷ்பு போல பப்ளியாக இருந்ததால் இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. விஜய், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் மாறினார். ஆனால், ஒரு கட்டத்தில் மார்கெட் இல்லாமல் காணாமல் போனார். அதோடு, சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: பிரச்னை மேல பிரச்னை!… பாக்கியலட்சுமியை பார்த்து நாங்க தான் பாஸ் ஃபீல் பண்ணனும்…
திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா ரசிகர்களுக்கு அவரிடம் என்ன பிடிக்குமோ அந்த பப்ளி உடலை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதோடு, இப்போது அவரின் நடிப்பில் வெளியாகும் எந்த திரைப்படங்களும் ஓடுவதில்லை.
சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்த படம்தான் 'மான் கராத்தே'. இந்த படத்தில் ஹன்சிகாவுடன் நடித்த அனுபவம் பற்றி சிவகார்த்திகேயன் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: இவர பாத்தா மலேசியா மாமா மாதிரியா இருக்கு?… ஸ்கெட்ச் போட்ட முத்து… சிக்குவாரா ரோகினி?
நானும், ஹன்சிகாவும் அந்த படத்தில் இடம் பெற்ற ‘டார்லிங் டம்பக்கு’ படத்தின் படப்பிடிப்புக்காக சண்டிகர் போனோம். படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென பதட்டமான ஹன்சிகா விமானத்தில் இருந்த ஒரு ஆண் ஊழியரை அழைத்து ‘ஒரு எமர்ஜென்சி.. பிளைட்டை சண்டிகருக்கு திருப்ப முடியுமா?’ எனக்கேட்டார்.
அதற்கு அந்த ஊழியர் ‘என்னாச்சி.. என்ன எமர்ஜென்ஸி’ எனக்கேட்க ஹன்சிகா ‘நான் தங்கியிருந்த ஹோட்டலில் என் மொபைல் சார்ஜரை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதை எடுக்க வேண்டும்’ என சொல்ல எனக்கோ சிரிப்பு தாங்கவில்லை. நான் சிரிக்கவும் அந்த நபர் என்னையும் முறைத்து பார்த்தார். இப்படித்தான் அடிக்கடி இதுபோல் எதையாவது செய்து கொண்டே இருப்பார்’ என சிவகார்த்திகேயன் கூறினார்.
இதையும் படிங்க: அச்சு அசல் அப்படியே இருக்காரே! இவர் இல்லைனா தனுஷ் இல்ல – வைரலாகும் டூப் நடிகரின் புகைப்படம்
COPYRIGHT 2024
Powered By Blinkcms