Connect with us

latest news

இவர பாத்தா மலேசியா மாமா மாதிரியா இருக்கு?… ஸ்கெட்ச் போட்ட முத்து… சிக்குவாரா ரோகினி?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் காய் நறுக்க உட்கார்த்து கன்னாப்பின்னாவென வெட்டி தள்ளிவிடுகிறார் பிரவுன் மணி. இதனால் எல்லாரும் அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர். ரோகினியோ சுடுத்தண்ணி கேட்டீங்களே உள்ளே வாங்க கூட்டி செல்கிறார்.

ரூமுக்குள் சென்றதும் ஏன் ஓவர் ஆக்ட்டிங் செய்றீங்க? நீங்க இப்போ வெளியில் வர வேண்டாம். ரூமிலயே படுத்து தூங்குங்க என்ச் சொல்லிவிட்டு செல்கிறார். அதை பார்த்த முத்துவுக்கு சந்தேகம் அதிகமாகி விடுகிறது. இவரை பார்த்தால் மலேசியா ஆள் மாதிரி தெரியலை. மந்தவெளி மாதிரில தெரியுது.

இதையும் படிங்க: விஜய்க்கும் பிரசாந்துக்கும் முட்டிக்கிச்சா!.. கோட் படத்தில் புது சிக்கல்.. பிரபலம் சொன்ன மேட்டர்!..

நடவடிக்கையும் சரியில்லை என்கிறார். உடனே செல்வம் அந்த ஆளுக்கிட்ட மலேசியா சரக்கு இருக்கா கேளு. இல்லனா கண்டுப்பிடிச்சிடலாம் என்கிறார். அதுவும் சரிதான். தனியா நேரம் கிடைக்கும் தள்ளிக்கிட்டு வரலாம் எனக் கூறிவிடுகிறார். அடுத்து மூன்று மருமகள்களும் தனியாக பொங்கல் வைக்கின்றனர்.

ஆனால் ஸ்ருதி மற்றும் ரோகினியால் கூட ஊதுக்குழலில் ஊத முடியாமல் போகிறது. உடனே மீனா மூன்று பொங்கலை வைத்து முடிக்கிறார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு எல்லாரும் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுகின்றனர். அப்போ சாப்பாடு எப்படி எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: செட்டப் செல்லப்பாவாக மாறிய சிவகார்த்திகேயன்?.. பின்னாடி டோலிவுட்டே சிரிக்குது பங்கு!..

பின்னர் அனைவரும் குடும்பமாக சேர்ந்து போட்டோ எடுத்து கொள்கின்றனர். ஸ்ருதி எல்லாரையும் ஹார்ட்டீன் சிம்பிள் வைக்க சொல்ல ரோகினி மாமாவை இல்லாமல் போட்டோவை கிளிக் பண்ணி தள்ளுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Continue Reading

More in latest news

To Top