latest news
பிரச்னை மேல பிரச்னை!… பாக்கியலட்சுமியை பார்த்து நாங்க தான் பாஸ் ஃபீல் பண்ணனும்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்துக்கும், முத்துவேல் குடும்பத்துக்கும் சண்டை நடக்கிறது. ராஜீ கல்யாணத்தை பிரம்மாண்டமா நடத்துறோம் பாரு. நீங்களாம் திருட்டு கல்யாணத்துக்கு நான் லாயக்கு என சவால் விட்டு செல்கிறார் முத்துவேல்.
சரவணன் கல்யாணத்தை இதைவிட பிரம்மாண்டமா செய்யணும் என பாண்டியன் யோசித்து கொண்டு இருக்கிறார். மறுபக்கம் கோமதியுடன் ரூமில் இருக்கிறார் மீனா. இப்படி எல்லாத்தையும் எல்லாரிடமும் சொல்லக்கூடாது என்கிறார் மீனா. அப்போ பாக்கியா சரியாக அங்கு வருகிறார். ஸ்வீட் தர கோமதி இவ்வளோ நேரம் இவ என்னலாம் சொன்னா தெரியுமா என மீனாவை மாட்டி விடுகிறார்.
இதையும் படிங்க: செட்டப் செல்லப்பாவாக மாறிய சிவகார்த்திகேயன்?.. பின்னாடி டோலிவுட்டே சிரிக்குது பங்கு!..
பாக்கியா சிரித்துக்கொண்டே நாங்களும் நல்ல குடும்பம் தான். பயப்படாதீங்க எனக் கொடுத்துவிட்டு செல்கிறார். அதன்பின், செந்திலிடம் பேச மீனா வெளியில் செல்ல இங்கையே பேசு என்கிறார் கோமதி. பின்னர் கோமதிக்கு பாண்டியன் கால் செய்ய கத்தி பேசி மீனாவை கடுப்பேத்திக்கொண்டு இருக்கிறார். மறுநாள் ஹோட்டலில் எழிலும், கதிரும் சந்தித்து கொள்கின்றனர்.
கோவிலில் மீனாவும், கோமதியும் அர்ச்சனை செய்ய செல்ல அங்கு 500 ரூபாயிற்கு சில்லறை இல்லை எனக் கூறிவிடுகின்றனர். பாக்கியா, அமிர்தா வர பாக்கியா காசு கொடுத்து இரண்டு அர்ச்சனை தட்டு வாங்கி கொடுக்கிறார். வீட்டில் செழியன் பேப்டிச பத்திரிக்கையை பார்த்து கவலையாக இருக்கிறார். அதே நேரத்தில் ஜெனிக்கு கால் செய்து பேசிக்கொண்டு இருக்கிறார் பாக்கியா.
நீங்க இல்லாம இந்த பங்ஷன் நடக்குறது என்னால் யோசிக்கவே முடியலை என ஜெனி வருத்தப்படுகிறார். உன் நிலைமை எனக்கு புரியுது. நிகழ்ச்சியில் சந்தோஷமா கலந்துக்கோ என பாக்கியா ஆறுதல் சொல்கிறார். குன்னக்குடியில் எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க கோபி பெரிய ஆபிஸ் வைத்து இருப்பதாக ராதிகா பெருமை பேசுகிறார். ராஜீக்கு பெரிய அளவில் நகை செய்ய வேண்டும் எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணன் தம்பிக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா? பிரபுதேவா குடும்பத்தில் வெடிக்கும் பூகம்பம்
ஆனால், ராஜீக்கு கண்ணன் மெசேஜ் அனுப்பி ஓடிப்போக பிளான் ரெடியாகி விட்டதாக கூற கண்ணீர் வடிக்கிறார். அதே நேரத்தில் பாக்கியாவுக்கு சமைக்க வந்த அமைச்சர் ஆட்கள் சாப்பாட்டில் மாற்றி மாற்றி உப்பை அள்ளி கொட்டுகிறார்கள். இதனை டேஸ்ட் செய்த பாக்கியா அதிர்ச்சி ஆகிவிடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.