அண்ணன் தம்பிக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா? பிரபுதேவா குடும்பத்தில் வெடிக்கும் பூகம்பம்

by Rohini |
prabhu
X

prabhu

Actor Prabhudeva: தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு மைக்கேல் ஜாக்சனாக கருதப்படுபவர் நடிகர் பிரபுதேவா. ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து சோலா சாங்கில் ஒரு சில படங்களில் ஆடி அதன் பின் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார். பிரபுதேவா ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இப்போது வரைக்கும் இருக்கிறார்கள்.

90களில் பிரபுதேவாவும் ஒரு பெரிய டாப் ஹீரோவாகவே வலம் வந்தார். சிம்ரன், ஜோதிகா, ரோஜா, மீனா போன்ற முன்னணி கனவு கன்னிகளுடன் ஜோடி சேர்ந்து ஆடிய பிரபுதேவா டைரக்‌ஷன் பக்கமும் பிஸியாக இருக்கிறார். ஏராளமான பாலிவுட் படங்களுக்கும் நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: இவர பாத்தா மலேசியா மாமா மாதிரியா இருக்கு?… ஸ்கெட்ச் போட்ட முத்து… சிக்குவாரா ரோகினி?

தமிழில் எப்படி பிரபுதேவாவுக்கு என்று ஒரு தனி மரியாதை இருக்கிறதோ அதே போல ஹிந்தியிலும் இவருக்கு ஒரு சரியான மார்கெட் இருந்துவருகிறது. விஜய் நடித்த போக்கிரி படம் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த படமாகும். அந்தப் படத்தின் வெற்றி பிரபுதேவாவை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இதன் தொடர்ச்சியாக ஹிந்தியிலும் படங்களை தயாரிக்க தொடங்கினார். இப்படி பிரபுதேவாவின் வாழ்க்கையில் ஒரே ஏறுமுகமாக இருப்பதால் அவரது குடும்பத்தில் ஒரு பார்சியாலிட்டியே நடக்கிறதாம். பிரபுதேவாவின் கடைசி தம்பி நாகேந்திர பிரசாத் கூறும் போது பணம் இருக்கிறவர்களைத்தான் இந்த சமுதாயம் மதிக்கும் என கூறி,

இதையும் படிங்க: செட்டப் செல்லப்பாவாக மாறிய சிவகார்த்திகேயன்?.. பின்னாடி டோலிவுட்டே சிரிக்குது பங்கு!..

எங்கள் வீட்டிலேயே பிரபுதேவா சொல்றதுதான் நடக்கும். அவர் சொல்றதைத்தான் என் அம்மா கேட்பார். ஏனெனில் அவர் நிறைய சம்பாதிக்கிறார் அல்லவா? அதற்காக அதை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எல்லாவற்றையும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் பார்க்க வேண்டும் என நாகேந்திர பிரசாத் கூறினார்.

Next Story