விஜய்தான் டார்கெட்டா?!. அஜித் போட்டோஸ் வெளிவரதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!. அடங்கப்பா!

Vijjay ajith: எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோருக்கு பின்னர் விஜயும் அஜித்தும் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். கடந்த 30 வருடங்களாகவே இருவருக்கும் தொழில் போட்டி என்பது மறைமுகமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருபக்கம் விஜயின் ரசிகர்களும், அஜித்தின் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் ஹேஷ்டேக் மூலம் சண்டை போட்டு வருகிறார்கள்.

சில சமயம் மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில் ஹேஷ்டேக் மற்றும் கமெண்ட்டுகளை போட்டு திட்டி வருகிறார்கள். இப்படி செய்ய வேண்டாம் என அஜித் சொல்லியும் அவரின் ரசிகர்கள் கேட்கவில்லை. அதேபோல், லியோ ஆடியோ விழாவில் ‘சோசியல் மீடியாவில் ஏன் இவ்வளவு கோபம்?’ என விஜய் கேட்டும் அவர்கள் மாறவில்லை.

இதையும் படிங்க: நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்…

ஒருபக்கம், விஜய் - அஜித் இடையான பனிப்போர் என்பது நிற்கவே இல்லை. விஜய் படம் தொடர்பான பட அறிவிப்போ அல்லது அவரை பற்றி செய்தியோ வெளியாகி எல்லோரும் அதைப்பற்றி பேசினால் அதை டைவர்ட் செய்வது போல அஜித் தொடர்பான ஒரு செய்தி வெளியாகும்.

ajith kumar

இதேபோல்தான், அஜித் தொடர்பான ஒரு செய்தியோ அல்லது அவரின் புகைப்படமோ வெளியானால் விஜய் படம் பற்றி ஒரு செய்தி வெளியாகி அதை திசை திருப்பும். இது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இது இருவரும் திட்டமிட்டு செய்கிறார்களா என்பது தெரியவும் இல்லை.

இதையும் படிங்க: அரசியலுக்கு வந்தா 1600 கோடி வேணும்!. விஜய்க்கு பின்னால் இருப்பது யார்?!.. பரபர தகவல்..

சமீபத்தில் விஜய் அரசியலில் இறங்கப்போகிறார்.. கூட்டம் முடிந்துவிட்டது... விரைவில் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய போகிறார்கள் என்கிற செய்தி பேசுபொருளாக மாறியது. உடனே அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக துவங்கியது.

அதுவும், தினமும் அசர்பைசானில் ஸ்டைலீஸ் லுக்கில் அஜித் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. இது விஜயின் அரசியல் எண்ட்ரி தொடர்பான செய்தியை நீர்த்துப்போகவும் செய்துவிட்டது. உண்மையில் இதை திட்டமிட்டுதான் அஜித் தரப்பு செய்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இதையும் படிங்க: எல்லாம் போச்சி!.. அத நம்பித்தான் விஜய்க்கு சம்பளமே!.. கோட் படத்துக்கு வந்த பெரிய சிக்கல்…

 

Related Articles

Next Story