எல்லாம் போச்சி!.. அத நம்பித்தான் விஜய்க்கு சம்பளமே!.. கோட் படத்துக்கு வந்த பெரிய சிக்கல்...

Goat: சினிமாவின் வியாபாரம் என்பது முன்பெல்லாம் திரையரங்குகள் மூலம் வரும் வசூலை மட்டுமே நம்பி இருந்தது. அதன்பின், தொலைக்காட்சியில் புதிய படங்கள் ஒளிபரப்ப துவங்கியதும் அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல தொகை கிடைத்தது. இப்போது அமேசான், நெக்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், சோனி, ஜீ தமிழ் என பல ஓடிடி தளங்கள் வந்துவிட்டது.

அதிலும் பிரீமியர் என சொல்லி தியேட்டருக்கு வராமல் நேரிடையாக ஓடிடிக்கு விற்று விடுகிறார்கள். ஏனெனில், தியேட்டரில் வெளியிட்டு அதில் வரும் லாபத்தை விட அதிக பணத்தை ஓடிடி நிறுவனங்கள் கொடுப்பதாக சொல்வதால் ‘ எதற்கு ரிஸ்க்?’ என கருதி தயாரிப்பாளர்களும் ஓடிடி நிறுவனங்களுக்கு படத்தை கொடுத்து விடுகிறார்கள். இதை துவங்கி வைத்தவர் சூர்யாதான். அவரின் சூரரைப்போற்று படம் அப்படித்தான் வெளியானது.

இதையும் படிங்க: மகனின் படத்தை கிழித்துத் தொங்க விட்ட எஸ்.ஏ.சி.. அப்படி என்னதான் நடந்தது?..

பிரிமியர் இல்லை எனில் படம் தியேட்டருக்கு வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வந்து விடுகிறது. தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று படம் பார்க்கும் ஆகும் செலவை விட வீட்டிலேயே பார்க்கலாம் என நினைக்கும் ரசிகர்கள் ஓடிடியில் படம் வரும் வரை காத்திருந்து பார்க்கிறார்கள்.

ஆனால், பிரீமியர் ரிலீஸாக வந்த பல படங்கள் ஓடிடியில் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. 4 வாரங்கள் கழித்து வரும் சில படங்களுக்கும் பெரிய வரவேற்பு இல்லை. எனவே, ஓடிடி நிறுவனங்கள் இப்போது உஷாராக துவங்கிவிட்டது. பிரீமியர் எனில் படத்தை பார்த்த பின்னரே படங்களை வாங்குவது பற்றி யோசிக்கிறார்கள்.

இதையும் படிங்க: ரஜினியுடன் 17 முறை மோதிய விஜயகாந்த் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?..

ஒருபக்கம், பெரிய நடிகர்களின் படங்களை பல கோடிகள் கொடுத்து வாங்கி நஷ்டத்தை சந்திக்கிறது ஓடிடி நிறுவனங்கள். அதனால், விலைகளை குறைக்க துவங்கிவிட்டார்கள். ஓடிடி மூலம் வரும் பணத்தை ஹீரோக்களுக்கு சம்பளமாக கொடுத்துவிடலாம் என கணக்குப்போட்ட தயாரிப்பாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சனை விஜயின் கோட் படத்திற்கே வந்துள்ளது. பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி வந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோட் படத்தை வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். ஏனெனில், தயாரிப்பாளர் தரப்பு பெரிய விலையை சொல்வதாக தெரிகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் கதவை மூடிவிட்டதால் அமேசன் பிரைமின் கதவை தட்ட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்தை அமேசன் பிரைம் வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை நம்பி மீண்டும் கோலிவுட்டுக்கு வரும் சீமான்!… கதையில் அவர் கேரக்டர் என்ன தெரியுமா?

 

Related Articles

Next Story