Connect with us
rajini

Cinema History

ரஜினியுடன் 17 முறை மோதிய விஜயகாந்த் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?..

சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்களுடன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடித்த படங்கள் 17 முறை நேரடியாக மோதியுள்ளன. யார் ஜெயித்தார், என்னென்ன என்று பார்க்கலாமா…

நான் சிகப்பு மனிதன்- ராமன் ஸ்ரீராமன்

1985 தமிழ்ப்புத்தாண்டு அன்று ரஜினியின் நான் சிகப்பு மனிதன் படமும், விஜயகாந்தின் ராமன் ஸ்ரீராமன் படமும் வெளியானது. இதுல ரஜினி தான் வின்னர். 1986 தீபாவளிக்கு ரஜினிக்கு மாவீரன் படமும், விஜயகாந்துக்கு தர்மதேவதை, தழுவாத கைகள் படமும் வெளியானது. இவற்றில் தர்மதேவதை படம் தான் சூப்பர்ஹிட்.

 வேலைக்காரன் – வேலுண்டு வினையில்லை 

1987 மார்ச்சில் ரஜினியின் வேலைக்காரன் படமும், விஜயகாந்துக்கு வேலுண்டு வினையில்லை படமும் வெளியானது. இதுல வேலைக்காரன் தான் செம மாஸ். அதே ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் மனிதன் படமும், விஜயகாந்தின் உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு என இரு படங்களும் வெளியாகின்றன. இவற்றில் எல்லா படங்களும் ஹிட். ஆனால் ரஜினியின் மனிதன் தான் மாஸ்.

1988 செப்டம்பரில் ரஜினியின் தர்மத்தின் தலைவன் படமும், விஜயகாந்தின் செந்தூரப்பூவே படமும் ரிலீஸ். இவற்றில் விஜயகாந்த் படம் 200 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. 1988 தமிழ்ப்புத்தாண்டு அன்று ரஜினியின் குரு சிஷ்யன் படமும், விஜயகாந்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம் படமும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

கொடி பறக்குது – உழைத்து வாழ வேண்டும்

KP-UV

KP-UV

1988 தீபாவளிக்கு ரஜினியின் கொடி பறக்குது படமும், விஜயகாந்துக்கு உழைத்து வாழ வேண்டும் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே எதிர்பார்த்த அளவு போகல. 1989 தீபாவளிக்கு ரஜினியின் மாப்பிள்ளை படமும், விஜயகாந்துக்கு தர்மம் வெல்லும், ராஜ நடை படமும் ரிலீஸ். இதுல மாப்பிள்ளை 200 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது.

1990 பொங்கலுக்கு ரஜினியின் பணக்காரன் படமும், விஜயகாந்தின் புலன் விசாரணை படமும் ரிலீஸ். இதுல புலன் விசாரணை தான் வின்னர். 1991 தீபாவளிக்கு ரஜினியின் தளபதி படமும் விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படமும் ரிலீஸ். இதுல ரஜினியின் தளபதி தான் வின்னர்.

மன்னன் – சின்னக்கவுண்டர்

1992 பொங்கலுக்கு ரஜினிக்கு மன்னன் படமும், விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி என்றாலும் சின்னக்கவுண்டர் தான் வின்னர். அதே ஆண்டில் தீபாவளிக்கு ரஜினியின் பாண்டியன் படமும், விஜயகாந்தின் காவியத்தலைவன் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் தான்.

1993 பிப்ரவரியில் ரஜினியின் எஜமான் படமும், விஜயகாந்தின் ஏழை ஜாதி படமும் ரிலீஸ். இதுல எஜமான் தான் வின்னர். அதே ஆண்டு ஜூனில் ரஜினியின் உழைப்பாளி படமும், விஜயகாந்தின் சக்கரை தேவன் படமும் ஹிட். இதுல ரஜினி தான் வின்னர். 1994 தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியின் வீரா படமும், விஜயகாந்தின் ஆனஸ்ட்ராஜ் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே ஹிட்னாலும் வீரா தான் வின்னர்.

பாட்ஷா – கருப்பு நிலா

1995 பொங்கலுக்கு ரஜினியின் பாட்ஷா படமும், விஜயகாந்தின் கருப்பு நிலா படமும் ரிலீஸ். இதுல ரஜினியின் பாட்ஷா தான் வின்னர். 1999 தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியின் படையப்பா படமும், விஜயகாந்தின் பெரியண்ணா படமும் ரிலீஸ். இதுலயும் ரஜினி தான் வின்னர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top