விக்னேஷ் சிவனை நம்பி மீண்டும் கோலிவுட்டுக்கு வரும் சீமான்!... கதையில் அவர் கேரக்டர் என்ன தெரியுமா?

Vignesh Shivan: நடிகர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐசி படத்தில் இயக்குனரும், அரசியல்வாதியுமான சீமான் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கதையை அவர் எப்படி ஓகே செய்தார். எதற்காக நடிக்கிறார் என்பது தான் தற்போது ஆச்சரிய தகவலாகி இருக்கிறது.

அஜித்தை இயக்க வேண்டிய விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பு தட்டிப் போனது. இதனை தொடர்ந்து அவர் இயக்க இருக்கும் திரைப்படம் தான் எல் ஐசி. லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் எனக் கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். நயன்தாரா இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: லீகலா 2 கல்யாணம்!. இல்லீகலா எத்தனை வேணா பண்ணுவேன்!.. 3வது கல்யாணம் பற்றி பேசும் வனிதா…

எல் ஐ சி படத்தின் பெயருக்கு முதலில் சர்ச்சை எழுந்தது. பிரபல நிறுவனம் எங்க கம்பெனி பெயரை வைக்க கூடாது என புகார் அளித்தது. இதை தொடர்ந்து தன்னுடைய எல் ஐ சி படத்திற்கு விளக்கம் அளித்து சமீபத்தில் விக்னேஷ் சிவன் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சீமான் நடிக்க இருக்கிறாராம். இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் இருக்கும் சீமான் இந்த படத்திலும் ஒரு இயற்கை விவசாயியாகவே நடிக்க போகிறாராம்.

அதிலும் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கிறார். ஆனால் ஒரு சின்ன கதாபாத்திரத்துக்கு சீமான் எப்படி ஒப்புக்கொள்வார். அதான் இல்லை. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு செயற்கை விவசாயத்தில் தான் அதிக ஆர்வமாம். அப்பா மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் ஆர்ப்பாட்டம் தான் முக்கிய கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரோபோ சங்கரை வண்டியில் வச்சு தள்ளிட்டு போகும் மனைவி! ஐய்யோ என்னாச்சு? வைரலாகும் வீடியோ

அதுமட்டுமல்லாமல், படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட போஸ்ட்டில் எல்ஐசி எனக் குறிப்பிடாமல் லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் என்பதில் எல் ஓ சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

 

Related Articles

Next Story