தடுமாறி கீழே விழுந்த விஜய்! தள்ளிவிட்ட நபரை அடி வெளுந்து வாங்கிய புஸ்ஸி ஆனந்த் - வைரலாகும் வீடியோ
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இளைய தளபதி என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட விஜய் இப்போது தளபதியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இன்று கூட திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கி வருகிறார் விஜய்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ரகசியமாக அடையாளம் கண்டு தன் மக்கள் இயக்கம் சார்பாக மொத்தம் 1500 பேருக்கு அந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மளிகை சாமான்கள் முதல் காய்கறிகள் வரை அந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: காலையில் ஒரு படம்… மாலையில் இன்னொன்னு… தூங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்..! 56 நாட்களில் ரிலீஸ்..!
தூத்துக்குடியில் 900 பேருக்கும் திரு நெல்வேலியில் 600 பேருக்கும் ஆக மொத்தம் 1500 பேரை திருநெல்வேலி வரவழைத்து அந்த நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெள்ளத்தால் இறந்த குடும்பங்களுக்கு தலா 25000 ரூபாயும் வழங்கப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
அதில் ஒரு நபருக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறாராம் விஜய். ஏனெனில் தூத்துக்குடியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் தன் வீட்டில் உள்ள ஜெனரேட்டர் மூலம் மின் சப்ளை இல்லாத வீடுகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: கமலையே உப்புமா சாப்பிட வைக்க போராடிய படக்குழு.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?
அந்த நேரத்தில் அவருக்கு கரண்ட் ஷாக் அடித்து இறந்து விட்டாராம். அதனால் அவர் குடும்பத்திற்கு மட்டும் ஒரு லட்சம் வழங்குகிறாராம் விஜய். இத்தனை பேரையும் தன் மக்கள் இயக்கம் சார்பாக ரகசியமாக கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்கி வருகிறாராம் விஜய்.
இந்த நிலையில் திருநெல்வேலியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெறும் நிலையில் அந்த மண்டபத்திற்கு விஜய் வருகை தந்தார். அப்போது மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தை தாண்டி விஜய் உள்ளே வர கதவின் வாயிலில் இருந்த காவலாளி திடீரென கதவை மூடினார்.
இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிரத்தினம்! பிரபலமான அந்த கேரக்டர் பிரகாஷ்ராஜுக்கு இப்படித்தான் வந்ததா?
இதனால் உள்ளே வந்த விஜய் தடுமாறி கீழே விழுந்தார். இதை அருகில் பார்த்துக் கொண்டிருந்த புஸ்ஸீ ஆனந்த் அந்த காவலாளியை தன் கைகளால் ஓங்கி அறையும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/TrollywoodX/status/1741001803116974170?s=20