இந்த மூஞ்சிலாம் ஹீரோவா?.. கலாய்த்த படக்குழு.. வீட்டில் கதறி அழுத விஜய்....
சினிமா உலகை பொறுத்தவரை புதிதாக ஒரு ஹீரோ நடிக்க வரும்போது அவர் அவ்வளவு அழகாக இல்லையெனில் ‘இந்த மூஞ்சிலாம் ஹீரோவாக நடிக்க வந்திருச்சி’ என காதுபடவே பேசுவார்கள். சில சமயம் சில தயாரிப்பாளர்கள் முகத்திற்கு நேராகவே சொல்வார்கள்.
அந்த அவமானங்களை சந்திக்கமால் பலரும் மேலே வர முடியாது. இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு பொறுமையாக அதே நேரம் நம்பிக்கையுடன் போராடினால்தான் சினிமாவில் இடம் கிடைக்கும். ரஜினி முதல் தனுஷ் வரை இந்து நடந்துள்ளது. இது நடிகர் விஜய்க்கும் நடந்துள்ளது.
மீசை வளர ஆரம்பிக்கும்போதே விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. கல்லூரி படிப்பை கூட அவர் முழுதாக முடிக்கவில்லை. அதனால், அவரின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜயை நடிகனாக்க விருப்பமில்லை. எஸ்.ஏ.சி. எவ்வளவு அறிவுரை கூறியும் விஜய் பிடிவாதமாக இருந்தார். அதை புரிந்துகொண்ட எஸ்.ஏ.சி வேறு யாரும் தன் மகனை வைத்து படம் எடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து அவரே சொந்த காசை போட்டு ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படம் மூலம் விஜயை அறிமுகம் செய்தார்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ‘இந்த மூஞ்சிலாம் ஹீரோவா.. ஆசைக்கு அளவே இல்லையா’ என விஜய் காது படவே பேசுவார்களாம். எனவே, தினமும் வீட்டில் அழுவாராம் விஜய். சினிமா அப்படித்தான்.. அப்படித்தான் பேசுவார்கள்.. நீதான் இதையெல்லாம் சகித்துக்கொண்டு உன்னை நிரூபிக்க வேண்டும்’ என அவரின் அப்பாவும், அம்மாவும் விஜய்க்கு ஆறுதல்சொல்வார்களாம்.
விஜயும் அப்படியே செய்து தற்போது சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ளார். அவரின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் தவம் கிடப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கெஸ்ட் ரோலில் பின்னிப் பெடல் எடுத்த நடிகர்கள் – ஒரு பார்வை