தவெக மாநாட்டில் இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!.. விஜயின் முடிவு சரியா?!...
Actor vijay: 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் விஜய். கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வர திட்டமிட்டிருக்கிறார் என்கிற செய்தி தொடர்ந்து வெளியாகி வந்தது. விஜயும் அடிக்கடி அவரின் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.
ஒருவழியாக சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதோடு, தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அறிவித்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும் அவர் கூறினார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் விஜயின் கட்சி போட்டியிடவில்லை.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு! ஈகோ இல்லாத ஆளுப்பா
கட்சியை அறிவித்துவிட்டு வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்க போனார். தற்போது படமே வெளியாகிவிட்டது. கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தீவிர விஜய் ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தாலும் மற்ற ரசிகர்களிடம் கொஞ்சம் கலவையான விமர்சனங்களே வருகிறது.
கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு விஜய் தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் எதிர்பார்ப்பது நடக்காது எனவும், தேர்தலுக்கு பின் எப்படியும் விஜய் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஒருபக்கம், விஜயின் முதல் கட்சி மாநாட்டுக்கான பணிகள் சூடுபிடித்திருக்கிறது. சமீபத்தில் விக்கிரவாண்டியில் இதற்கான இடம் பார்க்கப்பட்டது. அரசி தரப்பில் அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், காவல் துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் மனுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் சிறுவர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார். மேலும், ஆண்கள் 30 ஆயிரம், பெண்கள் 15 ஆயிரம், முதியோர்கள் 5 ஆயிரம், மாற்றுத்திறனாளி 500 பேர் என 50 ஆயிரத்து 500 கலந்து கொள்வார்கள் என புஸ்ஸி ஆனந்த் சொல்லி இருக்கிறார். சிறுவர் பலரும் விஜயின் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அனுமதி இல்லை என சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.