Connect with us
vijay

Cinema History

டேன்ஸ் மாஸ்டர் வீட்டுக்கே போய் விடிய விடிய பயிற்சி எடுத்த விஜய்!.. அட அந்த படத்துக்கா!…

விஜய்க்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பே நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பள்ளி, கல்லூரி வரையில் கூட நடன நிகழ்ச்சிகளில் நண்பர்களுடன் சேர்ந்து ஆடும்போது ஓரத்தில் சுமாராக ஆடிக்கொண்டிருப்பாராம். ஆனால், சினிமாவில் அவர் நடனமாடுவதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது என அவரின் நண்பர் சஞ்சீவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சினிமாதான் தனது கேரியர் என விஜய் முடிவு செய்ததுமே நடனம் கற்க துவங்கினார். சில நடன மாஸ்டர்களிடம் போய் நடனம் கற்றுக்கொண்டார். வீட்டில் பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டு பல மணி நேரம் நடனம் ஆடிக்கொண்டிருப்பாராம். இதை பல வருடங்களுக்கு முன்பு அவரின் வீட்டின் அருகே வசித்து வந்த நடிகர் ராமராஜனே ஊடகம் ஒன்றில் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…

துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் நடித்த எல்லா படங்களிலுமே விஜய் நடனமாடியிருந்தார். ஆனால், பெரிதாக எடுபவில்லை. விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த ‘பூவே உனக்காக’ பாடலில் அவரது நடத்திற்கென்றே ‘ ஓ பியாரி பானிபூரி’ ஒரு பாடல் வைக்கப்பட்டது. அப்போதே விஜயின் நடனத்திறமை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதன்பின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, காதலுக்கு மரியாதை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற பல படங்களிலும் விஜய் தனது நடன திறமையை காட்டினார். எனவே, விஜயின் ரசிகர்களுக்கு அவரின் நடனமே ஃபேவரைட்டாக மாறிவிட்டது. அதன்பின் விஜய் படங்கள் என்றாலே அவர் நடனத்திற்காகவே 3 பாடல்கள் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஷங்கர் மகள் திருமணத்துல அட்டெண்டன்ஸ் போட்ட சங்கீதா!.. விஜய் வரமாட்டாருன்னு வந்துட்டாரோ!..

இப்போதிருக்கும் நடிகர்களில் விஜயை போல நளினமாக நடனமாட தெரிந்தவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை பல நடிகர்களும் ஒத்துகொண்டார்கள். ஜுனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு போன்ற தெலுங்கு நடிகர்களும் விஜயின் நடனத்தை பார்த்து வாயை பிளக்கிறார்கள். எப்படிப்பட்ட கஷ்டமான ஸ்டெப்ஸ் என்றாலும் சரி ஒருமுறை நடன இயக்குனர் ஆடிக்காட்டினால் அப்படியே ஆடிவிடுவார் விஜய். இத்தனைக்கும் ரிகர்சல் கூட அவர் பார்ப்பதில்லை.

வசந்த் இயக்கத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் ’துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது’ பாடலை படமாக்கும்போது தினமும் இரவு நடன இயக்குனர் ராஜு சுந்தரம் வீட்டுக்கே போய் நடன அசைவுகளை பயிற்சி எடுப்பாராம் விஜய். தனது படங்களில் நடனம் சிறப்பாக அமைய வேண்டும் என்றே எப்போதும் அவர் நினைப்பதே இதற்கு காரணம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top