Connect with us
vijay

Cinema News

ஒரு செல்ஃபியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை – நிவாரணம் கொடுக்க வந்த விஜய்க்கு எதிராக திரும்பிய சம்பவம்

Actor Vijay:  நடிகர் என்பதையும் தாண்டி விஜய் செய்த அந்த உதவி கண்டிப்பாக பாராட்டக் கூடியது. ஆனால் அவர் செய்த உதவியை பற்றி வெளியில் தெரிந்ததா என்றால் இல்லை. அதற்கு மாறாக அங்கு நடந்த சில சம்பவங்கள் விஜய்க்கு எதிராக திரும்பியதுதான் மிச்சம்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு நிவாரணம் கொடுக்க போன விஜய் அங்கு சில விஷயங்களை அவரே ஆச்சரியமாக பார்க்க நேர்ந்தது. அதுவும் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டு  மறு நாளே இந்த மாதிரி விஜய் செய்தது விஜயகாந்த் இடத்தில் இனி பயணிப்பேன் என்பதை மறைமுகமாக கூறுவதை போல இருந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இப்படி ஒரு நம்பிக்கை இருந்ததா?!. மனுஷன் பச்ச புள்ளையா இருந்திருக்காரே…

ஏனெனில் விஜயகாந்தும் ஒரு நடிகராக அரசியலில் குதித்தார். அவர் மறைவிற்கு எப்பேற்பட்ட கூட்டம் வந்திருந்தது என்பதையும் பார்க்க முடிந்தது. இதையெல்லாம் விஜய் கவனிக்காமலா இருந்திருப்பார். அதன் காரணமாகத்தான் நிவாரணம் கொடுக்கும் இடத்தில் அவ்வளவு ப்ரஷ்ஷராக இருந்த போதும் சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் சமாளித்தார் விஜய்.

இதில் கவனிக்க வேண்டியது. ஒரு இளம் பெண் செல்ஃபி எடுக்க வர போஸ் கொடுத்துவிட்டு விஜய் இது வேணாமா வேணாமா என ஆச்சரியத்துடன் கேட்பார். அந்த பெண்ணும் வேணாம் . செல்ஃபி எடுக்கத்தான் வந்தேன் என்பது போல் சொல்லிவிட்டு சென்றார்.

இதையும் படிங்க: எங்க போனாலும் பார்க்கிங் பஞ்சாயத்து!.. 20 ஆயிரம் சதுர அடியில் பெரிய வீடு கட்டும் வடிவேலு!..

இந்த ஒரு சம்பவம் தான் இப்போது அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது. அதாவது வெள்ளத்தால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை முறையாக கணக்கிட்டுத்தானே எல்லாரையும் வரச் சொல்லியிருப்பார்கள். அப்படி இருக்கும் போது இந்த பெண் செல்ஃபி எடுக்கத்தான் வந்தேன் என்று எப்படி சொல்ல முடியும்?

அப்போ இதெல்லாம் செட்டப்பா? என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு சாதாராண நிவாரணம் கொடுக்கும் இடத்திலேயே அவருடைய நிர்வாகிகள் இப்படி செயல்படும் போது வருங்கால அரசியலை எப்படி இவர்களை வைத்து விஜய் நடத்தப் போகிறார் என்பதுதான் சந்தேகம். அதாவது ஒரு உதவி செய்ய வருகிறீர்கள். அந்த உதவி சம்பந்தப்பட்டவர்க்கு சரியாக போகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: நான் அவர் கூட இருந்திருந்தா கேப்டனை எப்படி பார்த்திருப்பீங்க தெரியுமா? மன்சூர் அலிகான் சொன்னத கேளுங்க

அப்போ எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? என்பதை கவனிக்க வேண்டும். அதில் ஏதேனும் குளறுபடி நடந்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் யாரோ அவர் மீதுதான் விஜய் கோவப்பட வேண்டும். ஆனால் அந்த இடத்தில் விஜய் அதை சமாளித்துவிட்டார். இருந்தாலும் இது  மிகப்பெரிய தவறு என ஒரு சினிமா பத்திரிக்கையாளர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top