ரயிலில் தோழிக்காக இரண்டு பேரை பொளந்து கட்டிய தளபதி.. அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!..

by சிவா |
vijay
X

Actor vijay: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் முக்கியமாக இருப்பவர் நடிகர் விஜய். துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் நடித்து அது தேராமல் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை வளர்த்துக்கொண்டவர். நன்றாக நடனமாடும் திறமை இவருக்கு பெரிய பலம். இதன் மூலமே இவருக்கு ரசிகர்களும், ரசிகைகளும் உருவாகினர்.

காதல் கதைகளில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த விஜய் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் கதைகளுக்கு தாவினார். ரசிகர்களால் இளைய தளபதி எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, கில்லி, துப்பாக்கி, மெர்சல் தெறி, மாஸ்டர், பிகில் ஆகிய படங்கள் இவரின் கேரியரில் முக்கிய படங்களாக அமைந்தது. தற்போது ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுகிறார்.

இதையும் படிங்க: கன்னத்தில் அறைந்த அசின்!.. அதிர்ந்துபோய் அப்படியே நின்ற விஜய்!.. அட அந்த படத்திலா?!..

இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் மாறிவிட்டார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள லியோ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது.

திரையில் அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்கும் விஜய் நிஜ வாழ்விலும் நண்பர்களுடன் இணைந்து சண்டை போட்ட சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். விஜய் சென்னை லயோலா கல்லூரியில் படித்துகொண்டிருந்த போது சீரியல் நடிகர் சஞ்சீவ் உட்பட அவருக்கு ஒரு நண்பர்கள் கேங் இருந்தது.

ஒருமுறை ஜாலியாக பெண் தோழிகளுடன் சேர்ந்து எல்லோரும் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ரயிலில் சென்று கொண்டிருந்த போது இரண்டு பேர் விஜயின் தோழிகளை சீண்டியுள்ளனர். இதில் கோபமடைந்த விஜய் கேங் அவர்கள் இருவரையும் புரட்டி எடுத்துவிட்டனர். அடி வாங்கிய இரண்டு பேரும் தங்களின் நண்பர்களுக்கு தகவல் கொடுக்க அடுத்த ஸ்டேஷனில் சுமார் 40 பேர் உள்ளே வந்து விஜய் கேங்கை பழிதீர்த்தார்களாம்.

இதையும் படிங்க: நல்லா கேட்டுக்கோங்க புஸ்ஸி ஆனந்த்!.. விஜய்யை இந்த பாப்பாவே விஜய்ன்னு தான் கூப்பிடுமாம்.. வீண் சீன் வேணா!..

Next Story