Connect with us

Cinema News

நல்லா கேட்டுக்கோங்க புஸ்ஸி ஆனந்த்!.. விஜய்யை இந்த பாப்பாவே விஜய்ன்னு தான் கூப்பிடுமாம்.. வீண் சீன் வேணா!..

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகிகள் சிலர் விஜய் அண்ணா என அழைத்த நிலையில், பெயர் சொல்லி அழைக்கக் கூடாது தளபதின்னு மட்டும் தான் சொல்ல வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் சொன்னது பெரும் பரபரப்பை கிளப்பி விவாதத்திற்கு உள்ளானது.

ஆனால், இதெல்லாம் புஸ்ஸி ஆனந்த் பண்ற வேலை தான் என்றும் விஜய்க்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ரசிகர்களே உறுதியாக சொல்லி வந்த நிலையில், லியோ படத்தில் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் மகளாக நடித்துள்ள குட்டி பொண்ணு இயல் சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்ன்னு தான் கூப்பிடுவேன் என்றும் அப்படிதான் கூப்பிடணும்னு விஜய் சொல்லியிருக்காரு என செம க்யூட்டாக அளித்த பேட்டி விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: லியோவை மொத்தமாக கழட்டி விட்ட விஜய்?.. தனியாளாக தொண்ட தண்ணி வத்த போராடும் லோகேஷ் கனகராஜ்!..

மேலும், அதை பல விஜய் ரசிகர்களே ஷேர் செய்து புஸ்ஸி ஆனந்த் இந்த பாப்பா சொல்றதை நல்லா காது கொடுத்து கேட்டுக்கோங்க, தேவையில்லாமல் எங்க அண்ணனோட பெயரை நீங்க டேமேஜ் பண்ணாதீங்க என விளாசி வருகின்றனர்.

காஷ்மீர் குளிரில் ஜுரம் எல்லாம் வந்த போது கூட செட்டில் ஒன்று இரண்டு டேக்குகளிலேயே சின்சியராக நடித்து அனைவரையுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார் இந்த குட்டிப் பாப்பா என லோகேஷ் கனகராஜ் பிறவி நடிகை என்றே பாராட்டி இருந்தார்.

இதையும் படிங்க: நம்புங்க பாஸ் நான் அன்பான இயக்குநர் தான்!.. விஜய் ரசிகர்களிடம் திடீரென மன்னிப்புக்கேட்ட நயன்தாரா கணவர்!..

எனக்கெல்லாம் 10வது படிக்கிற வரை அறிவு இருந்ததா? என்றே சந்தேகம் தான். ஆனால், என்ன சொன்னாலும் அப்படியே கேட்டு உடனடியா பண்ணிடுவான்னு சொன்னார். நடிகர் விஜய் என்னுடன் விளையாடுவார் என்றும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் குட்டி த்ரிஷா பேசிய க்யூட் வீடியோ வைரலாகி வருகிறது.

காதலில் சொதப்புவது எப்படி, அரிமா நம்பி, டிக் டிக் டிக் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள நடிகர் அர்ஜுனனின் மகள் தான் இயல் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top