Connect with us

Cinema News

நம்புங்க பாஸ் நான் அன்பான இயக்குநர் தான்!.. விஜய் ரசிகர்களிடம் திடீரென மன்னிப்புக்கேட்ட நயன்தாரா கணவர்!..

இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்ட ஒரு லைக் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி நடிகை நயன்தாராவை மோசமாக திட்ட ஆரம்பித்து விட்டனர். இதை அறிந்த விக்னேஷ் சிவன் தேவையில்லாமல் பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டோமே என நினைத்து திடீரென மன்னிப்பு கேட்டு போட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் இடையே எந்த நடிகர் சூப்பர் என்கிற சண்டையை சில விஷமிகள் திட்டமிட்டே நெகட்டிவிட்டியை பரப்பும் விதங்களில் சில ஐடிக்களில் சண்டை மூட்டி விட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டு மந்தை போல அடிதடியில் ஈடுபட செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காஷ்மீர்ல அந்த ஹைனா சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் இவ்ளோ ரிஸ்க் எடுத்தாரா?..

ஆனால், சினிமா பிரபலங்கள் எப்போதும் தேவையில்லாமல் அந்த வலையில் சிக்கி கமெண்ட் அல்லது லைக் போட்டு சண்டையை மேலும், பெரிதாக விடவே மாட்டார்கள்.

ஆனால், சோஷியல் மீடியாவே கதியென கிடக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பஞ்சாயத்து என கிளம்பிய வதந்தி போஸ்ட்டுக்கு லைக் போட்ட நிலையில், ரஜினி ரசிகர்கள், பாருங்க நாங்க சொன்னா நம்பல, விக்னேஷ் சிவனுக்கே உண்மை தெரிஞ்சு லைக் போட்டுருக்காரு என பத்த வைக்க, நேற்று முழுவதும் விஜய் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை மட்டுமின்றி அவரது மனைவி நயன்தாராவையும் மோசமாக திட்ட ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஜிம் மாஸ்டருடன் லாஸ்லியா!.. கமெண்ட் பக்கம் முழுக்க காதல் கதை தான் ஓடுது!..

விஷயம் பெரியளவுக்கு சென்ற நிலையில், சுதாரித்துக் கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் நான் வெறும் லோகேஷ் போட்டோவை மட்டுமே பார்த்து விட்டு லைக் போட்டுட்டேன்.. சோஷியல் மீடியாவில் யாரு லோகேஷ் போட்டோ போட்டாலும் லைக் போட்டுருவேன், நான் அந்த அளவுக்கு அவரோட தீவிர ரசிகர் என்கிற ரேஞ்சுக்கு ஒரு உருட்டை உருட்டி என்னோட சில்லி மிஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் மற்றும் லோகி ரசிகர்கள் மன்னித்து விடுங்க, லியோ பிளாக்பஸ்டர் அடிக்கும், லியோவை கொண்டாடுவோம் என பதிவிட்டு எஸ்கேப் ஆக முடிவு செய்திருக்கிறார்.

விடாமுயற்சி படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை அஜித் ஏன் விரட்டி விட்டார் என இப்போது தான் தெரியுது. ஒரு இயக்குநருக்கு உண்டான வேலைகளை விக்னேஷ் சிவன் எப்போதுமே செய்ய மாட்டார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top