மீண்டும் ஜிம் மாஸ்டருடன் லாஸ்லியா!.. கமெண்ட் பக்கம் முழுக்க காதல் கதை தான் ஓடுது!..

கவினுக்கு திருமணம் ஆனதில் இருந்தே லாஸ்லியா பித்துப் பிடித்தது போல இருந்து வருகிறார். சமீபத்தில், எதையோ இழந்து விட்டேன் என்றெல்லாம் பேசியிருந்தார். இந்நிலையில், புதிதாக காதல் வலையில் விழுந்து விட்டது போல கேப்ஷன் கொடுத்து மீண்டும் ஜிம் மாஸ்டருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட இது காதல் தானே லாஸ்லியா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா, ரைசா வில்சன் உள்ளிட்டோர் ரசிகர்களை ஈர்த்த நிலையில், சீசன் 2 வில் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா அழகான போட்டியாளர்களாக கலந்து கொண்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தனர்.

இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்லை!.. 100 லியோ அப்டேட் கொடுத்துருக்காரு லோகேஷ் கனகராஜ்.. இது ரத்னகுமார் உருட்டு!..

ஆனால் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இலங்கை தமிழ் பேசிக்கொண்டு செம பப்ளி ஆக லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் என்ட்ரி ஆன நிலையில் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் பேரன்பையும் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ஹீரோயின் ஆவார் என் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடப்பட்ட போட்டியாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தின் நடித்திருந்தார். அதன் பின்னர் கூகுளை கூட்டமா படத்தில் தர்ஷன் உடன் இணைந்து நடித்தார்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸுக்கு பெரிய கும்பிடு!.. சந்திரமுகி 2வை பார்த்து காண்டாகிட்டாரா நயன்தாரா!..

ஆனால் இரண்டு படங்களும் சரியாக போகாத நிலையில் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் மொத்தமாக கிடைக்காமல் போய்விட்டது. தனது உடல் எடையை சிக்கென ஸ்லிம் ஆக குறைத்து புதிய படங்களின் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

ஜிம் மாஸ்டருடன் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் செல்பி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் இல் லாஸ்லியா பதிவிட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் ஆவதற்கு கேப்ஷன் ஆக ”She became the love she searched for!” என்கிற கேப்ஷனை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தலைவர் 171 படத்தில் இதையெல்லாம் செய்ய போகிறேன்!.. லோகேஷ் சொன்ன சர்ப்பரைஸ்!..

அதை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஒரு வழியாக லவ்வர் செட்டாகி விட்டார் போல தெரிகிறது என கமெண்ட் போட்டு வருகின்றனர். இதன் மூலம் என்ன சொல்ல வரீங்கனே தெரியல என்றும் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது என்றும் கலாய்த்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story