Connect with us
thalaivar 170

Cinema News

தலைவர் 171-ல் இதையெல்லாம் செய்ய போறேன்!.. லோகேஷ் சொன்ன செம சர்ப்பரைஸ்!..

Thalaivar 170 : இப்போது இளசுகள் அதிகம் விரும்பும் ஒரு இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் திரைக்கதையில் அவர் செய்யும் வித்தை. ஒரு நல்ல சினிமா ரசிகர் நல்ல இயக்குனராக முடியும் என்பதற்கு இவரே முக்கிய சாட்சி. கமல்ஹாசனின் தீவிர ரசிகர் இவர். விருமாண்டி படம் பார்த்துவிட்டுதான் இயக்குனராகும் ஆசையே தனக்கு வந்ததாக சொல்லியிருக்கிறார்.

குறும்படங்களை இயக்க துவங்கிய லோகேஷ் சினிமாவுக்காக சில கதைகளை எழுதினார். அதில், மாநகரம் பட கதை டேக் ஆப் ஆகி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே நெருப்பு மீது நிற்பது போல திரைக்கதை அமைத்திருந்தார். அதன்பின் மாஸ்டர், விக்ரம் என அடித்து ஆடினார். இப்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதையும் படிங்க: சந்திரமுகி 2வை பார்த்து காண்டாகிட்டாரா நயன்தாரா!.. ராகவா லாரன்ஸுக்கு பெரிய கும்பிடு போட்டுட்டாராம்!..

அடுத்து ரஜினியின் 171வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த லோகேஷ் தலைவர் 170 படம் பற்றி பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பிரம்மஹம்சா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பீஸ்ட், பிரின்ஸ், லியோ ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்தான்.

இதையும் படிங்க: அவனை ஹீரோவா போட்டு எடுக்கலாம்னு நினைச்சேன்!.. தலைவர் 171 சுவாரஸ்யம் சொன்ன லோகேஷ்!..

வழக்கம்போல் இந்த படத்திலும் லோகேஷின் உதவியாளர் விஷ்னு எட்வன் ஒரு பாடலை எழுதவிருக்கிறார். சமீபகாலமாக ஒளிப்பதிவில் ஐமேக்ஸ் முறை பிரபலமாகி வருகிறது, லியோ படத்தில் சாதாரண கேமராவில் எடுத்து ஐமேக்ஸ் முறைக்கு மாற்றியிருந்தனர். ஆனால், தலைவர் 170 படத்தில் ஐமேக்ஸ் கேமராவிலேயே லோகேஷ் பல காட்சிகளையும் எடுக்கவுள்ளாராம்.

இப்படம் ஒரு வித்தியாசமான பரிசோதனை முயற்சி எனவும் இப்படத்தின் கதையை லோகேஷ் தனது முதல் படமான மாநகரம் படத்திற்கு முன்பே எழுதிவிட்டேன் எனவும் லோகேஷ் கூறியுள்ளார். பொதுவாக ரஜினி ஒரு மணி நேரத்திற்கு மேல் கதை கேட்பார். ஆனால், இப்படத்தின் கதையை லோகேஷ் சொல்ல துவங்கி 20 நிமிடங்களிலேயே இப்படத்தில் நடிக்கிறேன் என சொல்லிவிட்டாராம்.

ப்ரீ புரடெக்‌ஷன் வேலைக்கு 5 மாதம் எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், ரிலீச் தேதியை முன்பே சொல்லாமல் மிகவும் பொறுமையாக இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பலபேர் என்ன திட்டினாங்க! போதும்டா சாமி – லோகேஷின் யுனிவெர்ஸுக்கு எண்ட் கார்டு போடப் போகும் படம்

google news
Continue Reading

More in Cinema News

To Top