Connect with us
lokesh

Cinema News

அவனை ஹீரோவா போட்டு எடுக்கலாம்னு நினைச்சேன்!.. தலைவர் 171 சுவாரஸ்யம் சொன்ன லோகேஷ்!..

Lokesh kanagaraj: வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜுக்கு சினிமா எடுப்பதில் ஆர்வம் ஏற்படவே அந்த வேலையை விட்டார். இயக்குனர்களிடம் உதவியாளராக சேர விருப்பமில்லாத லோகேஷ் குறும்படங்களை எடுக்க துவங்கினார். அதன்பின் மாநகரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் அவர் அமைத்த திரைக்கதை ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதன்பின் கைதி படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் போல ஒரு திரைக்கதையை ரசிகர்கள் இதுவரை பார்த்தது இல்லை. இந்த படமும் ஹிட் அடிக்கவே விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: தலைவர் 170-க்கு ரிலீஸ் தேதியை குறித்த ரஜினி!.. சிக்குறவன்லாம் சின்னா பின்னம் ஆகணுமாம்!..

அதன்பின் கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலை வாரிக்குவித்தது. கமல் நடித்து வெளியான திரைப்படங்களில் இந்த அளவுக்கு எந்த படமும் ஓடியதில்லை. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து இப்படம் சாதனை படைத்தது.

இப்போது மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த திரைப்படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…

லியோ படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் ஒரு புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார். ரஜினி இப்போது ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தபின் அவர் லோகேஷின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ரஜினி படம் பற்றி பேசிய லோகேஷ் ‘இந்த படத்தின் கதையை நான் மாநகரம் படம் இயக்குவதற்கு முன்பே எழுதியிருந்தேன். என்னுடை நண்பன் ஒருவனை ஹீரோவாக போட்டு படமெடுக்க நினைத்திருந்தேன். ஆனால், இப்போது ரஜினி சாரை வைத்து அந்த கதையை இயக்கவுள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் 5 மாதங்கள் இப்படத்திற்கான வேலை இருக்கிறது. இந்த தேதியில் ரிலீஸ் என சொல்லி இப்படத்தை எடுக்க முடியாது. மிகவும் பொறுமையாக அந்த படத்தை எடுக்கப்போகிறேன்’ என லோகேஷ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் பட டைட்டிலை உருவாக்கிய ரஜினி மகள்!.. இதுக்கா செல்லங்களா இப்படி அடிச்சிக்கிட்டீங்க!..

google news
Continue Reading

More in Cinema News

To Top