6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?!.. பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பும் கோட்!…

Published on: September 12, 2024
goat
---Advertisement---

Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 5ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம்தான் கோட்(The greatest of all time). இந்த படத்தில் விஜயுடன் இனைந்து சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என பலரும் நடித்திருந்தார்கள். அதோடு, வழக்கமாக வெங்கட்பிரபு படங்களில் நடிக்கும் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட சிலரும் இப்படத்தில் இருந்தனர்.

அதேபோல், தொடர்ந்து வெங்கட்பிரபு படங்களுக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவே இந்த படத்திற்கும் இசையமைத்திருந்தார். லியோ போல துவக்கம் முதலே இப்படத்தை புரமோட் செய்து ஹைப் ஏத்தவில்லை. அதற்கு காரணம், லியோ படத்திற்கு இருந்த அதிக எதிர்பார்ப்பே அப்படத்தின் வசூலை பாதித்தது.

இதையும் படிங்க: ‘கோட்’ காப்பினு சொன்னாங்க.. கொஞ்சம் கூட மாத்தாம அப்படியே எடுத்து வச்சிருக்காரே

ஏனெனில், அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் 2ம் பாதி ரசிகர்களை கவரவில்லை என்பதால் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள் ஒருகட்டத்தில், நான் செய்த தவறு அது என லோகேஷ் கனகராஜே ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போனது. அது கோட் படத்தில் நடக்கக்கூடாது என தயாரிப்பாளர் அர்ச்சனா மற்றும் வெங்கட்பிரபு இருவரும் நினைத்தனர்.

அது ஓரவுளவுக்கு கை கொடுத்திருக்கிறது. அதே நேரம் கோட் படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் மட்டுமே நல்ல வசூலை பெற்றிருக்கிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இப்படத்திற்கு அதிக வரவேற்பு இல்லை. முதல் நாள் இப்படம் 126 கோடி வசூல் செய்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் சொல்லியது.

இதையும் படிங்க: வில்லன் வேஷமுனா சும்மாவா? கோட் படத்தில் பிரபுதேவா சம்பளம் இத்தனை கோடியா?

ஆனால், அதோடு சரி. இப்போதுவரை இப்படத்தின் வசூல் பற்றி எந்த அப்டேட்டையும் அவர்கள் கொடுக்கவில்லை. ஒருபக்கம், இப்படம் தொடர்பாக பல சர்ச்சைகள், அதுபற்றி வெங்கட்பிரபு கொடுக்கும் விளக்கங்கள் என கோட் படத்தை வைபரேஷன் மோடிலேயே வைத்திருக்கிறார்கள்.

அதுவே இப்படத்திற்கு ஒரு புரமோஷனாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் சென்று பலரும் படம் பார்க்கிறார்கள். இந்நிலையில், படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலக அளவில் இப்படம் சுமார் 310 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த வாரம் சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி, ஓணம் போன்ற விடுமுறை நாட்கள் வருவதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.