ஷூட்டிங்கில் முதல் 3 நாள் படுத்தி எடுத்த லோகேஷ் கனகராஜ்!. கடுப்பாகி விஜய் கேட்ட கேள்வி!..

Published on: November 28, 2024
leo
---Advertisement---

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்கள் இயக்கி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கென தனி ரசிகர் கூட்டங்களே உண்டு. தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இல்லாத எதிர்பர்ப்பை விஜயை வைத்து இவர் இயக்கிய லியோ படத்திற்கு இருந்தது.

இத்தனைக்கும் லோகேஷ் கனகராஜ் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. வங்கியில் வேலை செய்து வந்த அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட அந்த வேலையை விட்டார். அதன்பின் குறும்படங்களை எடுக்க துவங்கினார். ஒருவழியாக ஒரு கதையை உருவாக்கி பல தயாரிப்பாளரிடம் போய் வாய்ப்பு கேட்டார்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடந்த வெற்றிவசந்த் – வைஷ்ணவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்

இறுதியாக அவரை எஸ்.ஆர்.பிரபு நம்ப அப்படி துவங்கிய படம்தான் மாநகரம். முதல் படத்திலேயே அதிர வைத்தார். அந்த படத்தின் மேக்கிங் பிடித்துப்போகவே மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு கைதி படம் எடுத்தார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

மாநகரம் போலவே ஒரு இரவில் நடிக்கும் கதையாக கைதியை உருவாக்கி இருந்தார் லோகேஷ். அதோடு, அதிர வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளோடு அசத்தலான திரைக்கதை அமைத்திருந்தார். அந்த படத்திற்கு பின் விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார்.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைத்து லியோ எடுத்தார். இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். அடுத்து கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் வெளியே தெரியவந்திருக்கிறது. மாஸ்டர் படத்தில் முதல் 3 நாட்களுக்கு எந்த முக்கிய காட்சியையும் லோகேஷ் எடுக்கவில்லையாம்.

விஜய் தூங்கி எழுவது, PS4 விளையாடுவது, மிக்ஸியில் ஜூஸ் அடிப்பது, மது போதையில் படுத்து கிடப்பது என ஜே.டி. கேரக்டருக்கான மாண்டேஜ் காட்சிகளை மட்டும் எடுத்திருக்கிறார். மூன்று நாட்களும் தொடர்ந்து இது போன்ற காட்சிகளை மட்டுமே லோகேஷ் எடுத்ததால் ஒரு கட்டத்தில் கோபமான விஜய் ‘படம் முழுக்க இப்படித்தான் போகப்போகுதா?’ என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: எல்லாரும் டைவர்ஸ் பண்றாங்க!. எதுக்கு கல்யாணம்?.. இப்படி சொல்லிட்டாரே திரிஷா!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.