நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்...

by சிவா |
vijay
X

vijay

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படம் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் விஜய். டீன் ஏஜிலேயே சினிமாவில் நடிப்பது என்பது அவரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அவரின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அவர் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்கவில்லை. இப்படி அடம்பிடித்து சினிமாவுக்கு வந்தவர்தான் விஜய்.

ஆனால், துவக்கத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவாராக மாறினார். காதல் படங்களில் நடித்து வந்த விஜய் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறினார்.

இதையும் படிங்க: லோகேஷ் பற்றி எஸ்.ஏ.சி சொன்னது உண்மையா?!.. இதுதான் நடந்திருக்கும்!.. பிரபலம் பேட்டி!…

அதன்பின்னர்தான் அவருக்கு ரசிகர்களும் அதிகமானார்கள். ஒருகட்டத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு வந்தார் விஜய். இப்போது அவரின் படங்கள் 400 கோடிக்கும் மேல் வரை வசூல் செய்கிறது. எனவே, 250 கோடியிலிருந்து 300 கோடி வரை சம்பளம் கேட்கும் நடிகராகவும் அவர் மாறியிருக்கிறார்.

இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், அரசியல் வேலைகளும் சூடுபிடித்திருக்கிறது. விரைவில் அவரின் கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. அவரின் இலக்கு நாடாளுமன்ற தேர்தலா இல்லை 2026 சட்டமன்ற தேர்தலா என்பது விரைவில் தெரியவரும்.

இதையும் படிங்க: எனக்கும் அஜித்துக்கும் சண்டை! நேரா வீட்டுக்கே வந்துட்டாரு.. சரத்குமார் வீட்டில் நடந்த அந்த சம்பவம்

கோட் திரைப்படம் விஜயின் 68வது திரைப்படமாகும். ஒருபக்கம் அப்பாவை போல விஜய் இயக்குனராக மாறுவாரா என்கிற எதிர்பார்ப்பும் அவரின் ரசிகர்களுக்கு இருக்கிறது. இதுபற்றி பல வருடங்களுக்கு முன்பே ஒரு பேட்டியில் பதில் சொன்ன விஜய் ‘நிறைய பேட்டிகளில் நான் பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறேன். திடீர்னு ஒரு நாள் ஒரு நியூஸ் வரும். கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் - விஜய் என பார்க்கும் ஆசை எனக்கும் இருக்கு. பாப்போம். பண்ணுவேன்’ என சொல்லி இருக்கிறார்.

vijay

இது சொல்லி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை விஜய் அதை செய்யவில்லை. ஒரு படத்திற்கு 250 கோடி சம்பளம். வருடத்திற்கு 2 படங்கள் நடிக்கும் அவர் 500 கோடி சம்பாதிக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் ஏன் இயக்குனர் ஆகப்போகிறார்? என கேட்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வந்தா 1600 கோடி வேணும்!. விஜய்க்கு பின்னால் இருப்பது யார்?!.. பரபர தகவல்..

Next Story