அப்பா உதவி செய்யுங்க.. கண் கலங்கி நின்ற மகன்..! – உடனே நடவடிக்கை எடுத்த விஜய்!..
நல்ல நடிகர் என்பதையும் தாண்டி தனது குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர் நடிகர் விஜய். பிஸியான படப்பிடிப்புகளுக்கு நடுவே சில காலங்கள் தனது குடும்பத்தாருடன் நாட்களை செலவிடுவதை ஒரு பழக்கமாகவே கொண்டவர் விஜய்.
நடிகர் அஜித் போலவே விஜய்யும் பலருக்கு நன்மைகள் செய்ய கூடியவர். ஆனால் அவர் அதை வெளிப்படையாக வெளியில் சொல்லாத காரணத்தால் பலருக்கும் அது தெரியாது. பத்திரிக்கையாளர் செய்யார் பாலு விஜய் செய்த விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
செய்யார் பாலு பத்திரிக்கையாளராக இருந்தபோது பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த பெண்ணை நேர்க்காணல் செய்வதற்காக சென்றிருந்தார். அந்த பெண் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். செய்யார் பாலு அவரை சந்திக்கும்போது அவர் பானை செய்துக்கொண்டிருந்தார்.
வறுமையில் இருந்த பெண்:
அவரது குடும்பம் பானை செய்யும் தொழிலை செய்து வந்தனர். அவர்கள் வீடும் சிறியதாக இருந்தது. பண கஷ்டத்தால் அந்த பெண் மேற்படிப்பை படிக்காமல் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தது. இதை பார்த்த செய்யார் பாலு அந்த செய்தியை பத்திரிக்கையில் வெளியிட்டார்.
பிறகு சிறிது நாட்கள் கழித்து விஜய் அவரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அந்த செய்தியை அவர் செய்யார் பாலுவிடம் காட்டி “என் மகன் இந்த செய்தியை படித்தான். படித்ததும் கண் கலங்கிவிட்டான். அப்பா இந்த பொண்ணுக்கு உதவி செய்யுங்க அப்பானு சொன்னான், நானும் இதை படிச்சேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த பொண்ணுக்கு உதவணும்” எனக் கூறியுள்ளார் விஜய்.
அதன் பிறகு அந்த பெண்ணை நேரில் சந்தித்த விஜய் அவரை சென்னையில் பிரபல இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இந்த செய்தியை செய்யார் பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.