இந்தியன் 2 படத்திற்கு உதவிய தளபதி விஜய்!.. அட இத கமலே எதிர்பார்த்திருக்க மாட்டாரே!...

ஷங்கரின் இயக்கத்தில் 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். நாட்டில் நிலவும் லஞ்சத்திற்கு எதிராக சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் பொங்கியெழுந்து அதிகாரிகளை களையெடுப்பதுதான் அப்படத்தின் கதை. இந்த படத்தால் லஞ்சம் ஒழிந்துவிட வில்லை என்றாலும் மக்களிடமும், அதிகாரிகளிடமும் இப்படம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.
இப்படத்தில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவாகவும், அவரின் மகனாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்திருந்தது. இந்நிலையில்தான் 26 வருடங்களுக்கு பின் இந்த வருடம் இந்தியன் 2 படம் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் வேலைகள் 4 வருடங்களுக்கு முன்பே துவங்கியது.
இதையும் படிங்க: அமர்க்களம் படத்தில் துவங்கி இப்போது வரை!.. 25 வருட வெள்ளி விழாவை கொண்டாடிய அஜித் – ஷாலினி ஜோடி…
ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிபோய் இப்போதுதான் படம் முடிவுக்கு வந்துள்ளது. வருகிற ஜூன் மாதம் இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவி இருக்கிறார்.
அதாவது, தரணி இயக்கத்தில் விஜய்,திரிஷா நடித்து 2004ம் வருடம் வெளியான திரைப்படம்தான் கில்லி. இந்த படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தை விஜயின் ரசிகர்கள் கூட்ட கூட்டமாக போய் கண்டு களித்து வருகிறார்கள். இதுவரை இப்படம் 17 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இதையும் படிங்க: குழந்தை பிறந்ததும் எல்லாம் போச்சு.. அட்லீ போட்ட ஷாக் பதிவு! வருத்தத்தில் காதல் மனைவி
இந்த படத்தை தயாரித்தவர் ஏ.எம்.ரத்தினம். இவர்தான் இந்தியன் படத்தின் தயாரிப்பாளரும் கூட. விஜயின் கில்லி படம் வெற்றியடைந்ததால் மே மாதம் இந்தியன் படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இந்த படம் வெளியாகி 26 வருடங்கள் ஆகிவிட்டதால் 2கே கிட்ஸ் யாரும் இப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, இந்தியன் 2 படம் வெளியாகும் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியன் முதல் பாகம் வெளியானால் அப்படத்தை பார்க்கும் 2கே கிட்ஸ்களுக்கு இப்படத்தின் கதை புரிவதோடு, இந்தியன் 2 படத்தை அவர்கள் பார்த்து புரிந்துகொள்வதற்கு நல்ல தொடக்கமாக அமையும் என நம்பப்படுகிறது. எனவே, இந்தியன் 2 படத்திற்கு விஜய் மறைமுகமாக உதவி இருக்கிறார் என்றே பார்க்கப்படுகிறது.