Connect with us
cap

Cinema News

செருப்பை தூக்கி வீசி எறிந்த ரசிகர்கள்! அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு நேர்ந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அவரின் இத்தகைய வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.

தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த  விஜய்க்கு உதவிக்கரம் கொடுத்தவர் விஜயகாந்த். செந்தூரப்பாண்டி படத்தில் விஜயை ப்ரோமோட் செய்ய எண்ணிய எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தப் படத்தில் தன் மகனுக்காக விஜயகாந்தை நடிக்க வைக்கும் படி கேட்டார்.

இதையும் படிங்க: வசமா மாட்டிக்கொண்ட பாக்கியலட்சுமி இயக்குனர்… என்னத்தை சொல்றாருனு தான் பார்ப்போமே!

குரு  பேச்சுக்கு பதில் பேசாதவர் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதோடு அந்தப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார். விஜயகாந்த் அந்த சமயம் பெரும் பீக்கில் இருந்ததால் விஜயகாந்திற்காக அந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றது.

அதிலிருந்தே விஜய் யார் என்று இந்த சினிமா உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. தொடர்ந்து மாஸ் ஹீரோவாக வளர்ந்து வந்தார் விஜய். ஆனால் விஜயகாந்திற்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் ஒரு தடவை கூட விஜய் கேப்டனை வந்து சந்திக்கவே இல்லை.

இதையும் படிங்க: ரியல் போலிஸுக்கே டஃப் கொடுத்த விஜயகாந்த்! காவல்துறை அதிகாரியாக பட்டைய கிளப்பிய படங்கள்

அது கேப்டன் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையி நேற்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் சிக்கி அந்த நெருக்கடியில் தட்டுத்தடுமாறி அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திவிட்டு போகும் போது பெரும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார். அப்போது அவர் கார் அருகே செல்லும் போது ரசிகர்கள் போ .. போ.. வெளியே போ.. துரோகி என்று திட்டியதோடு செருப்பை வீசியும் எறிந்தனர். இது கேப்டன் மீது உள்ள அன்பு காரணமாக இருந்தாலும் சமுதாயத்தில் பெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர் மீது இப்படி செய்தது மக்கள் மத்தியில் பெரும் சல சலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாழ்ந்தவர் கோடி.. என்றும் மனதில் இருப்பார் விஜயகாந்த்!.. கண்கலங்கி அஞ்சலி செலுத்திய ரஜினி….

இதோ அந்த வீடியோ லிங்: https://x.com/natarajan333/status/1740463807624089831?s=20

google news
Continue Reading

More in Cinema News

To Top