More
Categories: Cinema News latest news

விஜய்க்கு மிகவும் பிடித்த திரைப்படம்! பாத்துட்டு மனுஷன் இப்படிலாம் பண்ணுவாரா?

Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு புகழ்மிக்க நடிகராக இருந்து வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

படத்தில் விஜய் இரட்டை வேடம் என்பதால் பல புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படமாக அமையும் என்றே தெரிகிறது. இதற்கு அடுத்தபடியாக எச் வினோத் உடன் இணைந்து அவருடைய 69 ஆவது படத்தில் இணைய இருக்கிறார் விஜய். அது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும். அடுத்ததாக அவருடைய அரசியல் பயணம் ஆரம்பமாகும்.

இதையும் படிங்க: இளையராஜாவின் மாங்குயிலே.. மாங்குயிலே! அவர பத்தி தெரியாம இவங்க வேற கும்மாளம் போடுறாங்களே

அதுவரை அவர் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொண்டு சினிமாவிற்கு பிரேக் கொடுத்துவிட்டு நேராக அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார் விஜய். இந்த நிலையில் சினிமா பிரபலங்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக விஜய் இருந்து வருகிறார். இப்போதுள்ள ஒரு இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னோடியாக விஜய் இருக்கிறார்.

அவருடைய படங்கள் தான் அந்த இளம் தலைமுறை நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன். அந்த அளவுக்கு தன் படங்களின் மூலம் ஒரு உத்வேகத்தை கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் விஜயை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார். விஜய்க்கு மிகவும் பிடித்தமான திரைப்படம் பற்றி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் சித்ரா லட்சுமணன் .

இதையும் படிங்க: சம்பளமே வாங்காம இசையமைத்த எம்.எஸ்.வி!.. அந்த இயக்குனர் ரொம்ப ஸ்பெஷல்!..

ஆர்யா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பாஸ் என்ற பாஸ்கரன் என்ற திரைப்படம் விஜய்க்கு மிகவும் பிடித்த திரைப்படமாம். குறிப்பாக அதில் சித்ரா லட்சுமணன் நடித்த காட்சிகள் அவரை மிகவும் ஈர்த்ததாம். அந்த படத்தை பார்த்த பிறகு விஜய் சித்ரா லட்சுமணனுக்கு தொலைபேசியில் அழைத்து அவர் நடித்த காட்சிகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டாராம். இந்த அளவுக்கு இந்த படமும் நான் நடித்த காட்சிகளும் விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனது என அந்த பேட்டியில் சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts