புரமோஷனுக்கு மட்டும் டிவிட் போடும் விஜய்!.. விஜயகாந்துக்கு வாயவே தொறக்கலயே!..

Published on: December 28, 2023
vijay
---Advertisement---

Vijay vijayakanth: திரையுலகினருக்கு மட்டுமல்ல. பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்கிற செய்தி இன்று காலை அதிர்ச்சியாக இருந்தது. எனவே, காலை முதலே திரையுலகினர், ரசிகர்கள் என எல்லோருமே சமூகவலைத்தளங்களில் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எங்கு போனாலும் விஜயகாந்த் இரங்கல் செய்திதான் கண்ணில் படுகிறது. அந்த அளவுக்கு விஜயகாந்தின் மரணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்தின் தூய்மையான குணமும், அவரின் தைரியமும்தான். நல்ல நடிகன் என்பதை விட நல்ல மனிதராக இருக்கவே ஆசைப்படுகிறேன் என சொன்னதோடு அப்படியே வாழ்ந்தும் காட்டினார் விஜயகாந்த்.

இதையும் படிங்க: ‘ரமணா’ படத்துல இத மறைச்சுதான் கேப்டனிடம் கதை சொன்னேன்!.. முருகதாஸ் பகிர்ந்த தகவல்

அவரை பற்றி கேள்விப்பட்டவர்களுக்கே அவர் மீது இவ்வளவு அன்பு எனில் அவரால் திரையுலகில் பலனடைந்தவர்கள் ஏராளம், எனவே, பலரும் கண்ணீர் விட்டு கதறிய படி அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் இறப்பு செய்தி கேட்டு தூத்துக்குடியிலிருந்த ரஜினி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை வந்துவிட்டார் ரஜினி.

நடிகர் விஷால் தான் நியூயார்க்கில் இருப்பதால் வரமுடியவில்லை என சொல்லி கண்ணீர் விட்டபடியே வீடியோ போட்டார். முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் அர்ஜூன், மன்சூர் அலிகான், நடிகர் தியாகு என பலரும் விஜயகாந்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: தனுஷ் குடும்பத்திற்கு இவ்ளோ விஷயம் செய்துள்ளாரா விஜயகாந்த்? இதுவரை வெளிவராத தகவல்..

நேரில் வரமுடியாத நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். சூர்யாவும் அவருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதேபோல், பல சின்ன நடிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால், நடிகர் விஜய் இதுவரை டிவிட்டும் போடவில்லை. எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தவில்லை.

vijay

ஒருவேளை நாளை சென்று அஞ்சலி செலுத்துவாரா என்பதும் தெரியவில்லை. துவக்கத்தில் விஜய் சில படங்களில் நடித்தும் பெரிதாக பிரபலமாகாத நிலையில், விஜயின் அப்பா எஸ்.ஏ.சி கேட்டுக்கொண்டதற்காக செந்தூரப்பாண்டி என்கிற படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். இந்த படம்தான் விஜயை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

துபாயில் இருக்கும் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி கூட விஜயகாந்தின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டார். ஆனால், இதுவரை விஜய் எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை. இதே விஜய் தனது படங்கள் தொடர்பான முக்கிய அப்டேட்டுகளை டிவிட்டரில் உடனே பதிவிட்டு விடுவார். அப்படிப்பட்டவர் விஜயகாந்த்தின் மரணம் பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்காத விஷயம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிச்சதால கேப்டன் பேர் வரல! உண்மையான காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.