ஜெயலலிதாவை டென்சன் செய்த விஜய்!.. அப்ப ஸ்டார்ட் ஆச்சி!.. இப்ப வொர்க் அவுட் ஆகுமா?!..

Published on: July 4, 2023
vijay
---Advertisement---

திரை உலகில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி படத்தின் மூலம் கம்பாக்கை கொடுத்திருந்தார். இதனை அடுத்து இவர் நடித்த படம் தான் தலைவா.

இந்தத் திரைப்படத்தில் நடிகை அமலா பால், சத்யராஜ், சந்தானம் மற்றும் பல நடித்திருந்தார்கள் ஜி.வி பிரகாஷ் இசை அமைக்க 2012 ஆம் ஆண்டு தலைவா படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. 

ஜெயலலிதா
ஜெயலலிதா

இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் ஏற்பட்டதோடு படத்தை வெளியிடக் கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தியது.

பின்னர் படம் வெளிவந்த பிறகு பல பிரச்சனைகளை இந்த படம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்தது மேலும் இந்த படத்தை 2012 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் எந்த படம் வெளி வந்தால் திரையரங்குகளில் வெடிகுண்டுகள் வைப்போம் என்று திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது எனவே ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் வெளியாகவில்லை.

இதற்குக் காரணம் எந்த படத்தில் அனல் பறக்கும் வசனங்கள் பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் டைம் டு லீட் என்ற வாசகம் படத்தின் தலைப்பில் இருந்ததுதான் மிக முக்கியமாக கருதப்பட்டது.

vijay
vijay

அதுமட்டுமல்லாமல் இந்த வசனத்தை ஜெயலலிதா பார்த்த போது கடுமையான கோபத்துக்கு உள்ளாக்கியதோடு அவரை டென்ஷன் ஆகவும் செய்தது. இவரது படங்களில் இதுபோன்ற வசனங்கள் இருக்கக் கூடாது அரசியல் பற்றிய எண்ணங்கள் மேலோங்க கூடாது அவரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டார்கள்.

சூழ்நிலையில் தற்போது இவரது அதிரடி நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியலில் விரைவில் களம் இறங்குவார் என்று தான் தோன்றுகிறது. அதற்கான நகர்வுகளை தளபதி விஜய் மேற்கொண்டு வருகிறார் என்று பலரும் பல விதத்தில் பேசி வருகிறார்கள்.

இது உண்மையா நடைமுறை சாத்தியமா என்பது காலத்தின் கைகளில் தான் உள்ளது. இனி இந்த சதுரங்க ஆட்டம் எப்படி முடியும் என்பது விரைவில் தெரியவரும்.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.