பிளாக்ல டிக்கெட் வித்து சிக்கிய நடிகர்... டிக்கெட்டே கிடைக்காமல் திரும்பிய விஜய்...!
கோட் படம் ரிலீஸாக இன்னும் 4 நாள் தான் இருக்கு. கர்நாடகா, கேரளாவில் அதிகாலை 4மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. கேரளாவில் அன்று மட்டும் 720 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். இங்கு மட்டும் காலை 9 மணி காட்சியை இன்னும் புக் பண்ண முடியாதவாறு திறக்காமல் உள்ளது.
மற்ற காட்சிகள் மட்டும் திறந்துருக்காங்க. சென்னையில் ரோகிணி தியேட்டர்ல மட்டும் திறந்துருக்காங்க. 400 ரூபா டிக்கெட்டாம். என்னன்னா ஸ்நாக்ஸ், டேக்ஸ் எல்லாம் சேர்த்து என்று குறிப்பிட்டுள்ளார்கள். சில ரசிகர்கள் நாங்க ஸ்நாக்ஸ் கேட்டோமோன்னு கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Also read: ரஜினி மகளா இது? இவ்ளோ குண்டாயிட்டாங்க.. சத்தியமா நம்ப முடியல
கோட் படத்தைத் தமிழக விநியோக உரிமை வாங்கியுள்ளது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம். இது சில காட்சிகளில் கவுண்டர்லயே 700 வரை டிக்கெட் விற்க விலை நிர்ணயம் பண்ணுங்கன்னு சொல்லி இருக்காங்களாம். ஒரு பக்கம் பிளாக்ல டிக்கெட் விற்கக்கூடாதுன்னு சொன்னாங்க.
இன்னொரு பக்கம் கவுண்டர்லயே அதிகமான விலையில் டிக்கெட் விற்கக்கூடாதுன்னு சொன்னாங்க. அப்புறம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர அதிகப்படியாக டிக்கெட் விற்கக்கூடாதுன்னு சொன்னாங்க.
190 ரூபாய் டிக்கெட்டை 700 ரூபாய்க்கு விற்பது எந்த வகையில் நியாயம்? மதுரையில் கோபுரம் சினிமாஸ் காலை 7 மணிக்கு 190 ரூபாய்க்குத் தான் வித்துருக்காங்க. அவங்க யாருன்னா பிரபல தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச்செழியன்.
கடைசியில பிளாக்ல கொடுக்குற டிக்கெட் கொஞ்சம் கொஞ்சமா மாறி ரசிகர் மன்ற டிக்கெட்னு கொடுக்க ஆரம்பிச்சாங்க. காரணம் என்னன்னா கட்டவுட், பாலாபிஷேகம், டிரம்ஸ் அடிக்கிறது உள்ளிட்ட செலவுகளை இந்த ஷோக்களில் டிக்கெட் விற்பதில் சரிசெய்து கொண்டார்கள். காலப்போக்கில் இதுவும் மாறிவிட்டது.
நடிகர் சென்றாயன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். பொல்லாதவன் படத்துல நடிச்சிருந்தாராம். அவர் ஒரு கம்பெனியில வேலை பார்த்துருக்காரு.
உடனே அவர் நடிச்ச படம்கஙதால கம்பெனி ஓனர் 20 டிக்கெட்டை வாங்கி படம் பார்க்க கிளம்பியிருக்காரு. போற வழியில ஒரு மேரேஜ்க்குப் போக வேண்டிய சூழல். உடனே அந்தக் கம்பெனி ஓனர் சென்றாயன்கிட்ட அந்த டிக்கெட்டைக் கொடுத்து 'நீ இதை வச்சி உங்க ப்ரண்ட்ஸ்ச கூப்பிட்டுட்டுப் படத்துக்குப் போயிரு. நீ தானே நடிச்சிருக்க'ன்னு சொன்னாரு.
உடனே 'சரி'ன்னு போன சென்றாயனுக்கு அசோக் நகர் காசி தியேட்டர் போனதும் இதை பிளாக்ல வித்தா என்னன்னு சபலம் வந்துருக்கு. போலீஸ் அவரைப் பிடித்துவிட்டது. உடனே நான் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன் சார்னு சொல்லி அழுதுருக்காரு. அப்புறம் அங்கு சப் இன்ஸ்பெக்டர் வந்ததும் அவரு அந்தப் படத்தோட முதல் காட்சியைப் பார்த்துருக்காரு.
இவரைப் பார்த்ததும் 'நீ இந்தப் படத்துல நடிச்சிருக்கியேடா'ன்னு கேட்க 'ஆமா சார். நான் தான் அது'ன்னு சொன்னதும் 'சரி சரி போய்த் தொலையா'ன்னு இறக்கி விட்டுருக்காரு. அப்போதான் எனக்குப் பெரிய மூச்சே வந்ததுன்னு சொன்னாரு.
விஜயே நடிக்க வர்றதுக்கு முன்னாடி வால்டர் வெற்றி வேல் படத்துக்கு எல்லாம் பிளாக்ல தான் டிக்கெட் வாங்கினாராம். பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்துக்கு டிக்கெட் கிடைக்காம திரும்பியே வந்துருக்காராம்.
மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.